இதுவும் அரசியல்..

அப்பாவு என்பவர் மாபெரும் சமூக சிந்தனையுடன் இல்லை பாஜக அட்டகாசத்தை வெளிகொண்டு வர இப்படி சொல்லிகொண்டிருப்பதாக யாரும் நினைத்தால் நினைத்துகொள்ளுங்கள்

ஆனால் விவகாரத்தின் இன்னொரு கோணம் வித்தியாசமானது

அதாவது இப்பொழுது கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் என்பது விஷயமல்ல விஷயம் இன்னும் ஆழமானது

அப்பாவு சொல்லும் எம்.சாண்ட் என்பது தற்போதைய திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்தின் பிரதான தொழில்களில் ஒன்று

இன்னும் பலருக்கு உண்டு என்றாலும் ஞானதிரவியம் தரப்பும் இதில் கொஞ்சம் பிரதானம்.

ஞானதிரவியத்துக்கும் அப்பாவு என்பவருக்கும் திமுக என்றாலும் பொருந்தாது நிறைய உட்கட்சி பூசல் அங்கு உண்டு

சந்தடி சாக்கில் ஞானதிரவியத்தை இழுத்துவிடுகின்றார் அப்பாவு, இது ஒருவிதமான ராஜதந்திர விளையாட்டு

அதே ஞானதிரவியத்துக்கு இனி இவரை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதும் தெரியும்

ஆக கன்னியாகுமரி எல்லையில் திமுக உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிக்கின்றது, எதிர்தரப்பு எப்படி இதை கையில் எடுக்கின்றது என்பதை பொறுத்து அடுத்த காட்சிகள் அமையும்

ஆனாலும் காவலர் கொலைக்கு காரணமான தீவிரவாதிகளை ஒன்றும் சொல்லாமல் தன் சொந்த கட்சிக்காரனை சிக்க வைப்பதில் அன்னார் தீவிரம் காட்டுகின்றார் அல்லவா?

இதுதான் அரசியல்

இதே மணல்திருட்டு கதையினை வைகோவும் முதலில் சொன்னார் நினைவிருக்கின்றதா?

ஆக வைகோவுக்கும் ஞானதிரவியத்தின் “வளர்ச்சி..” பிடிக்கவில்லை என்பது தெரிகின்றதா இல்லையா?

இதுவும் அரசியல்..