ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர்

வள்ளுவன் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரின் ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர்

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து ”

எனும் குறளை வள்ளுவன் அவருக்காகவே எழுதினான்

சில விஷயங்களை தவறாக படித்தால் கூட உருப்படலாம் என்பதற்கு அவரே உதாரணம்

ராமாயணத்தை படித்து எல்லோரும் ராமனை சிந்தித்தால் இவர் மட்டும் விபீஷ்ணனை வணங்கி அப்படியே உருவானவர்

அதோடு கூனியின் வஞ்சகத்தை படிக்க சொன்னால் இவர் அவளிடமிருந்து குனிந்து நிற்பது எப்படி என்பதை அழகாக கற்றுகொண்டவர்

வாலியினை படிக்க சொன்னால் சுக்ரீவனை படித்தவர்

கிருஷ்ணன காதையில் குசேலனை மட்டும் படித்தவர்

அவதாரங்களில் கூட ராமனையும் கண்ணணையும் பார்க்க சொன்னால் அவர் வராக அவதாரத்தை மட்டும் பார்த்தவர்

ஆம் வராகமே மேல் நோக்கி பார்க்காது, கீழ்நோக்கி குனிந்து தோண்டி அகழ்ந்து கிழங்கெடுக்கும். புரிய சிரமாமன அந்த வராக தத்துவத்தை மிக எளிதாக பற்றி பிடித்து வாழ்வில் ஜொலித்தவர்

தாயினை சுற்றி பழம் பெற்ற பிள்ளையார் கதைக்கு கூட இன்றளவும் அவர்தான் எடுத்துகாட்டு

இப்படி பண்டைய இந்திய இதிகாசம் மற்றும் இந்து வரலாறுகளில் தனக்கு தேவையான பாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை போலவே உருவானவர்

ஆம், அந்த பன்னீர் செல்வத்துக்கு இன்று பிறந்த நாள்

குனிந்தே ஒரு மனிதன் நிமிரமுடியும் என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு சொல்வதற்காகவே அவதரித்த அவர் இன்னும் பல்லாண்டுகள் குனிந்தே நல்வாழ்வு வாழட்டும்..