ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை, எதுக்குண்ணா எல்லா மக்களும் அவங்க கையால பானை செஞ்சி, அவங்க கையாலே நெல்லு விளைய வச்சி, அவங்க கையாலே நெல் குத்தி பொங்க வைக்கணும்

நான் அங்க இருந்தேன், அண்ணன் பானை செஞ்சாரு, அண்ணி மதிவதனி நெல்லு குத்துனாங்க, பொட்டு அம்மான் அடுப்பு செஞ்சாரு, ஆண்டன் பாலசிங்கம் கரும்பு சுமந்து வந்தாரு

தளபதி பால்ராஜ் பனங்கிழங்கு புடுங்கினார், தீபன் தீபற்றவைத்தான், தமிழினி அக்கா, விதுஷா அக்காவெலாம் கும்பி பாட்டு படிச்சிட்டு இருந்தாங்க‌

பொங்கல் வச்சோம், எல்லோரும் தமிழ் பொங்கல், தமிழ் பொங்கல்னு கத்தினாங்க,, எவ்வளவு ஆனந்தம் தெரியுமா?

அண்ணன் என்கிட்ட சொன்னாரு “தம்பி பொங்கல் எடுத்து சூரியனுக்கு படையடா” ,

நான் சொன்னேன் “அண்ணே திமுகவோட சின்னம் அது, அதுனால நான் அதுக்கு படைக்க மாட்டேன் , எனக்கு தெரிஞ்ச சூரியன் நீங்கதாண்ணே உங்களுக்கு படைக்கிறேன்னு ஊட்டிவிட்டேன்..”

பொட்டு அம்மனும், கே பத்மநாபனும் என்ன கட்டி பிடிச்சி அழுதாங்க,

அண்ணன் தனியே போய் தென்னைமரத்தை கட்டி பிடிச்சி அழுதார் , ஏண்ணா அவர் தனியாகத்தான் அழுவார்

மறுநாள் ஜல்லிகட்டு

அண்ணன் சொன்னார் , “இந்த வருஷம் காளை இல்லையடா, தம்பி சீமானை அடக்கிருங்கடா பார்ப்போம், முடிஞா சிங்களனையும் வர சொல்லுங்க‌…”

புஹ்ஹஹஹஹஹ.. புஹஹஹாஹாஆ

ஒரு பய வரலியே, நான் களத்துல சட்டைய கழற்றிட்டு நிக்குறேன் ஒரு சிங்கள பயலையும் காணோம்

புஹ்ஹ்ஹஹாஹ்ஹஹஹா… புஹஹஹஹஹ