இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது

இந்தியா தன் முதலாவது விண்வெளி வீரனை அதாவது இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது

ககன்யான் என பெயரிடபட்டிருக்கும் அத்திட்டத்தின் மொத்த செலவு பத்தாயிரம் கோடி, இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டுவிழாவான 2022ல் இந்த சாதனையினை இந்தியா செய்யும்

உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளே விண்வெளிக்கு அனுப்பபட்டனர், நம் ராக்கேஷ் சர்மாவும் கல்பனா சாவ்லாவும் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க கலன்களில் சென்றார்கள்

இம்முறை நாமே நம் சொந்த கலனில் அனுப்ப போகின்றோம்

விண்வெளி பயணம் என்பதால் ராணுவ பைலட்டுகளே இதற்கு சரிபட்டு வருவர், இதனால் 4 பேர் தேர்ந்தெடுக்கபட்டு பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பிவிட்டது இந்தியா

இந்திய வான்படை , இஸ்ரோ இணைந்து செய்யும் முயற்சி இது, விஷேஷ ஜி.எஸ்.எல்.வி வாகனமும் தயாரிக்கபடுகின்றது

ஆக இருவருடத்தில் இந்திய வீரர்கள் விண்வெளிக்கு செல்வார்கள், உலகம் அதை மாபெரும் சாதனையாக பார்த்து வாழ்த்து தெரிவிக்கும்

அப்பொழுதும் திராவிட தமிழ்கோஷ்டிகள் மோடி அடுத்து விண்வெளிக்கு செல்வாரோ? எப்படி வாய்ப்பை தவறவிட்டார்? என வழக்கம் போல கலாய்த்து அவர்களே சிரித்தும் கொள்வார்கள்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் சொந்த ராக்கெட்டில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நாடு இந்தியா, எவ்வளவோ சிக்கல்களிடையே அது தன் விண்வெளி அறிவினை வளர்த்து வருகின்றது அதன் சொந்த முயற்சி வாழ்த்துகுரியது என சொல்லிகொண்டிருக்கின்றது உலகம்