தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு

தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என கிளம்பிவிட்டார் திமுக சர்வாதிகாரி

காங்கிரசார் கேட்கும் மிக கூர்மையான கேள்விகள், எழுபதுகளில் பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து , எரித்து அவமானபடுத்தியதை அன்றைய முதல்வர் கருணாநிதி ரசித்தாரா? என கேட்கபடும் கேள்விகளை திசைதிருப்ப அவருக்கு வேறு வழி தெரியவில்லை, தஞ்சை கோவில் பக்கம் வந்துவிட்டார்

சரி, அவ்வளவு வந்தவர் மனைவி துர்கா ஸ்டாலினை தஞ்சை கோவிலுக்கு செல்ல சொல்லட்டும் பார்க்கலாம், சொல்லம்ட்டார் , கோவிலை பற்றிய நம்பிக்கை அப்படி

இப்பொழுது விஷயம் கோவில் பற்றிய நம்பிக்கை அல்ல சமஸ்கிருத மந்திர வழிபாடு

மதம் என்பது மொழிகளை தாண்டிய விஷயம், பல மொழிகளில் வேரூன்றி படர்ந்துவிட்ட விஷயம், எல்லா இனமும் எல்லா மொழியும் படிக்க முடியாது என்பதால் பொதுமொழி ஒன்று தேவையாய் இருந்தது

அப்படி யூதருக்கு ஹீப்ரு இருந்தது, இஸ்லாமியருக்கு அரேபிய மொழி இருந்தது, புத்த மதத்தவருக்கு பாலி என்றொரு மொழி இருந்தது, கிறிஸ்தவருக்கு லத்தீனும் பின்பு ஆங்கிலமும் வந்தன‌

இந்துக்களுக்கு சமஸ்கிருதம் இருந்தது இன்றளவும் இருக்கின்றது

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்துக்கள் பல மொழியில் கலந்து கிடப்பதால் பொதுவான மொழியாக அது இணைத்தது, ஆலய இணைப்பு சங்கிலி அதுதான்

காசியின் மகன் ராமேஸ்வரம் வந்தாலோ, தமிழனும் மலையாளியும் காசி சென்றாலோ ஆலய பூஜை, யாகம் உட்பட எல்லாவற்றுக்கும் அது இணைப்பாய் இருக்கின்றது

வேதம் என்பது வார்த்தைகளின் தொகுப்பு, வார்த்தைகள் சரியாக உச்சரிக்கபட வேண்டும்

இசையின் ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு விளைவினை கொண்டுவரும் என்பார்கள், இசையால் மழை வரவைக்க முடியும், இசையால் தீபத்தை ஏற்றமுடியும்

சமஸ்கிருத ஸ்லோகங்களும் அம்மாதிரி வலிமையனவை, அவை முறையாக உச்சரிக்கபடல் வேண்டும்

பல இனங்களை , நாடெல்லாம் இருக்கும் பன்மொழி பேசும் ஆலயங்களை ஒரே சங்கிலியில் இணைத்த மொழி சமஸ்கிருதம்

ஆலயங்களின் குருக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரி வழிபாடு நடத்த அம்மொழி அவசியம் , அதுவே அந்த தனிதன்மையினை காத்து நிற்கும்

இவை அக்காலத்திலே ஞானமிக்க ரிஷிகளால் செய்யபட்ட ஏற்பாடு , ஆகமவிதிபடி அதை பின்பற்றவேண்டும், இந்துமத நிலைப்புதன்மை அதில்தான் இருக்கின்றது

சில கேள்விகளை நீங்கள் கேட்கலாம், ஏன் தமிழில் ஆழ்வார்கள். அடியார்கள் எல்லாம் தமிழில் பாடிவைக்கவில்லையா? ஏன் அதை கருவறையில் பாட கூடாது?

ஆண்டார்களும் அடியார்களும் கருவறையில் வழிபட்டு பாடவில்லை, ஆலய மண்டபங்களிலும் வாசலிலும் நின்று தங்கள் ஆன்மாவில் இருந்து பாடி வழிபட்டனர்

இப்பொழுதும் ஆலய மண்டபங்களில் அப்பாடல் ஒலிப்பதை யார் தடுக்க முடியும்? ஆனால் கருவறை வழிபாடும் அர்ச்சனையும் யாகங்களும் சமஸ்கிருத்ததிலே இருந்த்தல் வேண்டும்

இன்று தமிழில் வழிபாடு என்பார்கள் அதை முறைபடுத்தினால் என்னாகு தெரியுமா?

முதலில் அப்பரையும் , மாணிக்க வாசகரையும் பாட சொல்வார்கள், அது எந்த தமிழனுக்கு தெரியும்? முக ஸ்டாலினுக்கே புரியாது

பின் பேச்சு தமிழில் “ஏ சிவனே உன்னை போற்றுகின்றேன்” என தொடங்குவார்கள் அது ஒவ்வொரு தமிழுக்கும் , தமிழகத்தின் ஒவ்வொரு பகுதி தமிழுக்கும் மாறும்

சென்னை தமிழில் ” செவனே ஒன்ன போற்றேன்ப்ப்பா.. பார்த்துக்காப்பா” , கோவை தமிழில் “சிவனுங்களா. அட கெரகம் பிடிச்சு சுத்துறேன்லோ, கொஞ்சம் கண்டுகிட்டாத்தான் என்னங்கோவ்”, மதுரை தமிழில் “சிவனே எப்போ அருள் புரிவீக” , நெல்லை தமிழில் “அய்யா, கும்பிடுதோம்லா, பார்த்து ஆசீர்வதியும், ரொம்ப சிக்கலா இருக்குலா” எனவும் ஒரு மாதிரி ஆகும்

கன்னியாகுமரி தமிழில் நினைத்து பார்க்கவே பகீர் என்கின்றது

தமிழே பல பாகங்களில் பல மாதிரி குழப்பி பேசபடும்பொழுது இதெல்லாம் நடைமுறைக்கு சரிவராது

ஆலய தனித்துவம் இந்நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்க, சமஸ்கிருத வழிபாடு கட்டாயம் தொடர்தல் வேண்டும்

திமுக தமிழ்காக்க வந்த இயக்கம் நல்லது

சரி, பள்ளிவாசல்களில் “அல்லாஹூ அக்பர் ..” என்பதை தமிழில் பாடவேண்டும் என திமுக சொல்லாதது ஏன்?

பைபிளில் சமஸ்கிருத வார்த்தை இருக்க கூடாது, ஆங்கில வழிபாடு நடக்க கூடாது எனவும் திமுக சொல்லாதது ஏன்?

தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜனே சமஸ்கிருத வழிபாடு நடத்தினான், நாயக்கர்களும் மராட்டியர்களும் நடத்தினர்

இவர்கள் இப்பொழுது வந்து குதிக்கின்றார்களாம்

சரி தஞ்சை கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவுக்கு புறவாசல் வழியே சென்றும் பெரும் சிக்கலில் மாட்டிய கருணாநிதி ஏன் தமிழ்வழிபாட்டை கோரவில்லை

ஆக கருணாநிதி தமிழின எதிர்யாக இருந்தாரா?

இல்லை, கருணாநிதி அரசியலுக்காக இந்துமதத்தை எதிர்த்தாலும் எதில் வைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார், முழு இந்துக்களையும் பகைத்துவிட்டு ஆட்சி சாத்தியமில்லை என்பதில் கவனமாயிருந்தார்

இந்த சர்வாதிகாரிக்கும் இனி நாம் ஆட்சிக்கே வரப்போவதில்லை என்பது தெரிந்ததால் இப்படி ஆரம்பித்துவிட்டார் போல‌

இன்று போலியொ சொட்டுமருந்து தினமாம், இவருக்கு மூளை குறைபாடு இருக்கலாம் அதற்கான மருந்தை யாரும் கொடுத்தால் நல்லது

உலகெல்லாம் இஸ்லாமியரை அரேபிய மொழி ஒன்றிணைக்குமாம், அவர்கள் தொழுகைக்கும் வழிபாட்டுக்கும் அது சரிவருமாம், இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுக்க அதனால் இணையலாமாம்

கிறிஸ்தவர் ஆங்கிலத்தான் இணையலமாம்

ஆனால் இந்துக்கள் இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ இணைந்தால் இவர்கள் விடமாட்டார்களாம்

சரி, ஸ்டாலின் என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம் அதையாவது அன்னார் சொல்வாரா?

தஞ்சை கோவிலை தொட கூடாது, தொட்டால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும், சர்வாதிகாரி தொட்டுவிட்டார், இனி நடப்பதை காலம் காட்டும்