ரஜினி களத்துக்கு வந்துவிட்டார்

ரஜினி களத்துக்கு வந்துவிட்டார், ஒரு முடிவோடு வந்திருக்கின்றார்

ரஜினி அந்த ராம்சாமி நடத்திய அழிச்சாட்டிய 1971 ஊர்வலம் தொடர்பாக துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கோரமுடியாது எனவும், தான் பத்திரிகை செய்தி அடிப்படையில் பேசியதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்

சாம்பிளுக்கு சில தகவல்களை காட்டி கொளுத்தி போடுகின்றார், இன்னும் வலுவான ஆதாரம் உண்டு

ஏன் வீரமணி 1971ல் ராமன் படத்தை செருப்பால் அடித்தபின்புதான் வென்றோம் என சொன்ன ஆதாரம் எல்லாம் உண்டு

ரஜினி முதல்கட்டமாக லேசாக அடித்துவிட்டு பல்ஸ் பார்க்கின்றார், கறுப்பு சட்டைகளின் பதில் அடாவடி பொறுத்து அடுத்த கட்டத்துக்கு வருவார்

எக்காரணம் கொண்டும் திமுக மறுபடி ஆட்சிக்கு வரகூடாது, கருணாநிதியின் பெயர் கெட வேண்டும், திமுக சரிந்து நாசமாக வேண்டும் என கறுப்பு சட்டை கறுப்பாடுகள் கங்கணம் கட்டியிருப்பதால் அடுத்த கட்டம் விரைவில் தொடங்கலாம்

பின்வாங்காமல் ஒரு முடிவோடு களத்துக்கு வந்துவிட்ட ரஜினிக்கு வாழ்த்துக்கள், எல்லோரும் பிள்ளையாரை தொடங்கிவிட்டு காரியம் தொடங்குவார்கள்

ரஜினி ராமரை வணங்கிவிட்டு அரசியலுக்கு வருகின்றார்

பொதுவாக ஆதித்ய ஹிருதயம் எனும் பாடல் இந்துக்களுக்கு உயர்வானது, யுத்தத்துக்கு செல்லும் ராமனை பற்றிய வரிகள் அது

ரஜினி அந்த ஆதித்திய ஹிருதயம் பாடலை கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகின்றது,

விரைவில் யுத்தம் வெடிக்கலாம்