பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா
பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா
அவர் பீகார் பிறப்பு எனினும் தேசிய கட்சி என்பதால் பாஜக சார்பில் இமாசல பிரதேசத்தில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார், 1998ல் அவர் எம்.எல்.ஏ அதாவது வெறும் இருபது வருடங்களுக்கு முன்பு இமாச்சல் மலை தொகுதியில் எம்.எல்.ஏ என இருந்தவர் இன்று பாஜக தலைவர்
படிபடியாக எம்பி மத்திய அமைச்சர் என வளர்ந்தவர் இன்று அக்கட்சியின் தலைவராகிவிட்டார்
இது வேறு எந்த கட்சியிலாவது சாத்தியமா?
காங்கிரஸ் நேரு குடும்பத்து காலில் கிடக்கின்றது , திமுகவில் வார்டு செயலாலருக்கு கூட வாரிசு அரசியல் வந்தாயிற்று
அதிமுகவில் தலமை மாறாது ஆனால் தொண்டனுக்கு வாய்ப்பு உண்டு என்ற நிலை இருந்தது, பன்னீர் செல்வம் அதையும் மாற்றினார்
இந்தியாவில் மம்தா, மாயாவதி,பவார், முலாயம்சிங், தேவகவுடா என எல்லா கட்சியினை எடுத்துகொண்டாலும் வாரிசு எனும் பாசிசம் இருக்கின்றது, இது எங்கள் குடும்ப கட்சி எனும் சர்வாதிகாரம் இருக்கின்றது
சர்வ நிச்சயமாக சூடமேற்றி சத்தியம் செய்து சொல்லலாம், முழு ஜனநாயகம் உள்ள கட்சி பாஜக மற்ற கட்சிகள் எல்லாம் பாசிசமும் சர்வாதிகாரமும் கொண்டவை
ஆனால் அவைதான் பாஜகவினை பாசிச கட்சி என்கின்றார்கள் அதற்கும் சிலர் கைதட்டுகின்றார்கள், முரசொலி படித்தால் அப்படித்தான்
