அதையும் அவரையும் புறந்தள்ளுதல் தமிழருக்கும் இந்துக்களுக்கும் நலம்
திராவிடம் எனும் வார்த்தை தமிழ் இலக்கண இலக்கியத்தில் எங்கு வருகின்றது என்பதுதான் தெரியவில்லை
அகத்தியனும் வள்ளுவனும் கம்பனும் சொல்லா வார்த்தை அது, இன்னும் ஆழமாக சொன்னால் விடம் என்றால் விஷம்
திர என்றால் அலை என்கின்றது தமிழ்
ஆக திராவிடம் என்றால் அலை அலையாக விஷம் என்றபொருளன்றி வேறொரு பொருளில் வராது
கவனியுங்கள், கட்சி பெயரும் தமிழ் அல்ல, கட்சி தலைவன் பெயரும் தமிழ் அல்ல ஆனால் கோருவது தஞ்சை கோவிலுக்கு தமிழிலில் குடமுழுக்கு
அதை கட்டிய ராஜராஜனே சமஸ்கிருதத்தை வணங்கி அதில் வழிபாடு செய்து குடமுழுக்கும் நடத்தியிருக்கும் பொழுது இவர்களுக்கு என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை
அக்கோவில் கட்டி ஆயிரம் வருடமாகின்றது, ஆயிரம் வருடமாக சமஸ்கிருந்த மந்திரம் ஓதபடுகின்றது , அதனால் தஞ்சாவூரில் இருந்தே தமிழ் விடைபெற்றுவிட்டதா?
விடைபெற்றிருந்தால் திருவாரூர் தங்கராசும், திருகுவளை கருணாநிதியும் உருவாகியிருக்க முடியுமா?
சரி, இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, நெற்றியில் விபூதி இட்டால் அழிப்பார்கள், பின்பு எந்த கோவிலில் எந்த மொழியில் வழிபாடு நடந்தால் இவர்களுக்கென்ன?
ஒரு வாதத்துக்கு தமிழில் வழிபாடு நடந்தால் திமுக தலமை தஞ்சை ஆலயத்துக்கு சென்று விபூதி வைத்து வணங்குமா?
சவாலை ஏற்க தயாரா?
மாட்டார்கள், தஞ்சைகோவில் பற்றி கருணாநிதியே அஞ்சினார், கடைசிவரை அனுபவபட்டார், அவருக்காவது இழக்க முதல்வர் பதவி இருந்தது
முக ஸ்டாலினுக்கு என்ன இருக்கின்றது? சென்று பார்க்கலாமே, சென்றால் வாயில் வரும் உளரல் வார்த்தையும் இழக்கவேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியும்
இதனால் வெற்று அரசியலுக்கு வறட்டு வார்த்தைகளை விட்டுகொண்டிருக்கின்றார்
அதையும் அவரையும் புறந்தள்ளுதல் தமிழருக்கும் இந்துக்களுக்கும் நலம்