தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார்

தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார்

பர்மாவின் யாங்கூன் எனப்படும் ரங்கூனில் தங்கத்தால் ஆன பகோடா எனப்படும் கோபுரங்கள் உண்டு, நிச்சயம் அவை உலக அதிசயத்தில் வரவேண்டும் ஆனால் வரவில்லை

அவை டன் கணக்கில் தங்கத்தான் உருவானவை,

அவற்றின் தங்கம் 200 டன்களுக்கும் மேலே இருக்கலாம் என்கின்றது கணக்கு. கலைநயம் மிகுந்திருப்பதால் வெள்ளையனும் இரண்டாம் உலகப்போரில் பர்மாவினை கைபற்றிய ஜப்பானியரும் அதில் கைவைக்கவில்லை

வேலூர் தங்க கோவில், நடராஜர் கோவில் கூரை எல்லாம் அதன் அருகில் கூட வரமுடியாது, பர்மாவின் நிஜமான பொற்காலங்களை பொன்னால் ஆன விகாரை எனும் பகோடாக்களால் காட்டிகொண்டிருக்கும் விஷயம் அவை.

வழக்கமாக அந்த தங்க பகோடாக்களை மட்டும் காணும் பர்மிய மக்களும் சுற்றுபயணிகளும் தலைவி குஷ்பு அங்கு சென்றபின், “அட யார் இந்த நடமாடும் தங்க‌ பகோடா” என வியந்து பார்க்கின்றார்கள்

ஆக தலைவி நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம் , பேசினால் மாநாடு என்ற அளவில் பெரும் கூட்டம் அவருக்கு கூடுகின்றது, அவரோடு செல்பி எடுக்க கடும் போட்டி நடந்திருகின்றது

தலைவி பர்மாவுக்கு வந்ததால் கூட்டமெல்லாம் அவரை காண சென்றதாகவும், தங்க விகாரைகளை காண யாருமில்லை என செய்தியினை பதிவு செய்கின்றது பர்மிய சுற்றுலாதுறை

தாஜ்மஹாலுக்கு இந்தியாவிலும், கோஹினூர் வைரத்துக்கு லண்டனிலும் சவால்விட்ட தலைவி இப்பொழுது பர்மிய தங்க பகோடாக்களுக்கும் சவால்விடுத்து வந்துள்ளார்..

கற்றோருக்கு மட்டுமல்ல தலைவிக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்பு..

தங்க விகாரையினையே தோற்கடித்துவிட்டு திரும்புகின்றார் தங்க தலைவி