வாழ்த்தெல்லாம் தலைவிக்கே

கங்கை இருக்கும்வரைதான் காசிக்கு வாழ்வு, நைல் இருக்கும் வரைதான் எகிப்துக்கும் வாழ்வு

காவேரி பாயும்வரைதான் டெல்டா பகுதி வாழமுடியும்

கிறிஸ்தவம் இருக்கும்வரைதான் போப் வாழமுடியும், ஈழதமிழன் இருக்கும் வரைதான் ராஜபக்சே ஆள‌முடியும்

அப்படித்தான் சுந்தர் சி என்பவரால்தான் தலைவியின் குங்குமமும் மங்கல தாலியும் நிலைக்க முடியும்

விக்டோரியா ராணியின் கணவர் என்பதால் அந்த மன்னனும் மதிக்கபட்டானாம், கிளியோபாட்ராவின் கணவனானால் மட்டுமே மதிப்பு என கலங்கி நின்றானாம் டாலமி

டாலமி என்ன? உலகையே வென்றாலும் கிளியோபாட்ராவின் கணவனாக இல்லை என்றால் என்ன பெருமை என மனம் வருந்தி சொன்னான் ஜூலியஸ் சீசர்

அப்படி தலைவியின் கணவனாக வந்து சேர்ந்தவர் சுந்தர்.சி. அந்த சுந்தர்.சி என்பவருக்கு இன்று பிறந்த நாளாம்

சுந்தர்.சி என்பவருக்கு சங்கம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

மிஸ்டர் சுந்தர்.சி, தலைவி தமிழகத்தின் முத்து, இந்தியாவின் சொத்து , அவரை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு

சங்கத்தார் எங்கள் இதயத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கின்றொம், அந்த கண்களில் ஆனந்த கண்ணீரை கூட காண சங்கம் விரும்பவில்லை

தலைவி நீண்டகாலம் வாழ்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டி இருப்பதால் நீங்களும் பல்லாண்டு வாழுங்கள்

அதற்காக மட்டும் பல்லாண்டு வாழுங்கள், தலைவி பணத்தில் படமெடுத்து அவரை கடனாளியாக்காமல் ஒழுங்காக வாழுங்கள். அப்படியாயின் தலைவியும் நன்று வாழ்வார்,
வயதான ரஜினியுடன் நடிக்கும் துர்பாக்கிய நிலையும் அவருக்கு வராது

தலைவி வாழ சுந்தர்.சி என்பவரும் வாழவேண்டியிருப்பதால் அவரும் வாழட்டும், மற்றபடி வாழ்த்தெல்லாம் தலைவிக்கே

“இன்று போல் என்றும்வாழ்க
இந்நாட்டு குலமகளே

வாழை கன்றுபோல்தலைவன் பக்கம்
சேர்ந்திருக்கும் திருமகளே”