காலமும் தெய்வமும் அதன் கணக்கினை சரியாக செய்கின்றது
ம.கோ ராமசந்திரனுக்கு கருப்பு சட்டைகள் என்றால் ஆகாது, ஆனாலும் வெளியில் சொல்லவில்லை
மாறாக தேர்ந்த ராஜதந்திரியான அவர் ஆன்மீகவாதிகளை சந்திப்பது, கோவில்களுக்கு உதவுவது என அவர்களை வேறுமாதிரி வெறுப்பேற்றுவார்
திராவிட பகுத்தறிவு அண்ணாவின் இதயகனி ஆலயகாரியங்களில் ஈடுபடுவதை பார்த்து கையினை பிசைந்து பெரியார் திடலில் முட்டிகொள்ளும் கறுப்புகள் அவ்வப்போது கருணாநிதியுடன் சேர்ந்து அவரை கலாய்ப்பதுண்டு
அப்படி கலாய்த்துவிட்டு ஒருமுறை வீரமணி அதிமுக மாவீரன் தாமரைகனியிடம் வசமாக சிக்கி, அடிவாங்கி உயிர்தப்பி வந்த சம்பவமெல்லாம் வரலாற்றில் உண்டு
அதன்பின் நெடுநாளைக்கு வீரமணி சத்தமே இல்லை
தாமரைகனி வழியில் இப்பொழுது ரஜினி ரசிகர்கள் கறுப்பு சட்டைகளின் இம்சையினை அடக்குவார்கள் போலிருக்கின்றது
இவ்வளவு ஆதாரம் காட்டியபின்பும், ஈரோட்டு ராம்சாமி 1971ல் இந்துமத வெறுப்பை எப்படி மட்டரகமாக காட்டினார் என நிரூபித்தபின்பும் ரஜினி வீட்டை முற்றுகையிட கிளம்புகின்றதாம் அக்கோஷ்டி
இது வீரமணி ரஜினி பெரும் விலை கொடுக்கவேண்டும் என மிரட்டியபின் வரும் போராட்ட அறிவிப்பு என்பது கவனிக்கவேண்டியது
ஆக தாமரைகனியின் ஆவியும் திரும்ப வரலாம், கறுப்பு சட்டைகளுக்கு ரஜினி ரசிகர்களோடு இந்து அபிமானினகளும் பொங்கல் வைக்கலாம்
காட்சிகள் அப்படித்தான் நகர்கின்றன,
முற்பகல் ராம்சாமி செய்தால் பிற்பகல் யார் தலையிலாவது விளையவேண்டும் அல்லவா?
இதோ கறுப்பு சட்டைகள் மற்றும் திமுக சர்வாதிகாரி தலையில் விழபோகின்றது, காலமும் தெய்வமும் அதன் கணக்கினை சரியாக செய்கின்றது.
