தொலைகாட்சிகளிடம் இருந்து மாணவர்களை காப்பாற்றுவோம்
முதலில் 5ம் வகுப்பு மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டியது இருப்பதால் அவர்களை கலைஞர் டிவி, சன் டிவி மற்றும் ஆதித்தியா டிவியில் கூத்தாட அனுமதிக்கமாட்டோம் என திமுக சொல்லுமா?
இல்லை மற்ற டிவிக்கள் சொல்லுமா, இல்லை இந்த போராளிகள்தான் சொல்வார்களா?
பள்ளிமாணவர்களுக்கான நடனம், பாடல் இன்னபிற இம்சைகள் போட்டி , பங்கேற்பு என அவர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகின்றது
வாழ்வே கூத்தாடுதல் என்பது போன்ற மகா விபரீத மனநிலைக்கு அக்குழந்தைகள டிவிக்கள் இழுத்து செல்கின்றன
மாணவர்கள் அறிவை வளர்க்கவோ, சிந்தனையினை தூண்டவோ ஒரு நிகழ்சியும் அங்கு இல்லை, எல்லாம் விஷ குப்பைகள்
டிவி என்ற மாயையில் சிக்கிகொண்டு அதில் பங்குபெற்றும் பாலசிறுவர்கள் ஒருமாதிரி திசை திரும்புகின்றார்கள்
சிந்தனை அவர்களிடம் அகன்று கூத்துகட்டும் ஒரு விபரீத கனவு தோன்றுகின்றது
முதலில் தொலைகாட்சிகளிடம் இருந்து மாணவர்களை காப்பாற்றுவோம், பொதுதேர்வினை பின்னர் பார்க்கலாம்