சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

வீரமணியின் வருகையினை உண்மையில் யாரும் எதிர்க்கவில்லை, அவர் நம் விருந்தினராக வருகின்றார் வரவேற்போம் என்றுதான் காத்திருக்கின்றார்கள்

அதாவது அவர் சாமிதோப்புக்கு வரட்டும் ஆனால் இந்துவாக வரட்டும், கறுப்பு சட்டையில் அனுமதிக்கமுடியாது இது போக சாமிதோப்புக்கு வருபவர்களை வரவேற்க சில சம்பிரதாயம் உண்டு அதை செய்யலாம்

வீரமணிக்கு காவிவேட்டி கட்டி , தலையில் மரியாதை தலப்பாகையினை காவி கலரில் கட்டி நெற்றியில் விபூதி இட்டு அவரை மரியாதையுடன் அழைத்து சென்று வைகுண்டர் சந்நிதானத்தில் நிற்க வைக்கத்தான் காத்திருந்தார்களாம்

வீரமணி வந்து இந்து உடையினை ஏற்று திருநீறு இட்டு அய்யா உண்டு என சொல்லி அதன்பின் பிரஜாபதியினை வாழ்த்தி வாயில் அவியலை ஊட்டினால் என்ன தகறாது?

விஷயம் வீரமணிக்கு கசிந்திருக்கின்றது, இதெல்லாம் எங்கள் சம்பிரதாயம் இல்லை என சொல்லியிருக்கின்றார்

அப்படி எங்களுக்கும் சம்பிரதாயம் உண்டு வந்தால் கதற கதற ஏற்க வைப்போம், அடித்து கூட காவி வேட்டி கட்டுவோம் என்று பதில் வந்திருக்கின்றது

அடி அடிக்கடி வாங்குவதுதான் ஆனால் இதென்ன விபரீதமான பதிலடி என தவித்த வீரமணி சென்னையில் முடங்கிவிட்டார்

வீரமணியின் குமரி பயணம் முடங்கிய மர்மம் இதுதான் என்கின்றார்கள்

ஒருவிஷயம் நாம் இதில் சொல்லிகொள்கின்றோம், சாமிதோப்பு நாடார்கள் கட்டுப்பாடு ஸ்தலம்

அங்கு பிராமணனும் ஆரியனும் எவனும் கிடையாது

இந்துமக்கள் விரட்டி அடித்திருகின்றார்கள், ஆனால் நாளையே ஆரிய சதி, பிராணிய சதி, பார்பானிய எதிர்ப்பு பாசிசம் என அங்கிருந்து அறிக்கைவரும் அதை யாரும் நம்பாதீர்கள்.