ரஜினி மகா தில்லாக சொல்கின்றார்
ரஜினி மகா தில்லாக சொல்கின்றார், அவருக்கு தேர்ந்த திட்டம் இருக்கலாம், வலையினை விரித்து வைத்து பொறியும் வைத்து சத்தமாக சொல்கின்றார் “ஆமாடா. பெரியார் செய்ததைத்தான் சொன்னேன், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது”
அதில் பகுத்தறிவு கோஷ்டி வசமாக சிக்கிவிட்டது.
இது தமிழ்நாட்டுக்கு புதிது, 1950களில் இருந்து புதிது, 70 வருட தமிழ்நாட்டுக்கு நிச்சயம் புதிது, ஒருவித திருப்பம்
காரணம், நாங்கள் ஆண்டவனையே கேள்வி கேட்பவர்கள் என நின்ற கூட்டம் அது, எம்.ஆர் ராதாவின் நாடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்சமல்ல
அதுவும் கீமாயண நாடகத்தில் கையில் மதுவும் இன்னொரு கையில் மாமிசமும் ஏந்தி ராதா ராமன் வேடமிட்டு கேவலபடுத்தியபொழுது கைதும் நடந்தது
ஆனால் நான் இதே வேடத்தில் கையில் மாமிசமும் கள்ளுமாக வருவேன் என நடந்து ரோடெல்லாம் நடந்து ராமரை அவமானபடுத்தினார் ராதா
இதெல்லாம் வெறும் எடுத்துகாட்டுகள், இன்னும் என்னென்ன ஆட்டமெல்லாமோ ஆடினார்கள்
ஆனால் ஆடிவிட்டு நாங்கள்தான் செய்தோம் , பிள்ளையாரை உடைத்தோம், அம்மனை மிதித்தோம், ராமனை எரித்தோம் என மகா அழுத்தமாக நின்றார்கள்
மதசார்பற்ற இந்தியா இதை அனுமதித்தது, ராஜா குமாரசாமி, ராஜாஜி , காமராஜர், பக்தவத்சலம் என எல்லோரும் இந்த குரங்கு கூட்டத்தை கண்டு தயங்கினார்கள்
அக்கூட்டம் பூமாலைபோல ராமாயணத்தை கிழித்தெறியும், சாத்வீக கட்டுபாடுகளை பிராண்டும், இந்துக்களின் நம்பிக்கையினை கடித்து வைக்கும், கேட்பார் இலர்
எல்லாம் செய்துவிட்டு ஆண்டவனையே அடக்கிவிட்டோம் என கூக்குரலுமிடும்
ராமசந்திரனும் ஜெயலலிதாவும் நேரடியாக இவர்களை அடிக்கமாட்டார்கள் ஆனால் எங்கே அடிக்கவேண்டுமோ அங்கே அடிப்பார்கள், இவர்கள் வலிக்காதது போல் நடிப்பார்கள்
வரலாற்றில் முதல் முறையாக ரஜினி ராமர்படம் செருப்பால் அடிக்கபட்டது என்கின்றார், திராவிட இம்சைகள் முதல் முறையாக நாங்கள் செருப்பால் அடிக்கவில்லை என பதறுகின்றது
எவ்வளவு பெரும் திருப்பம்?
ஒரு காலத்தில் ராமனை செருப்பால் அடித்தோம் என கொக்கரித்து அதற்கு விளக்கமும் அளித்த கோஷ்டி இன்று பம்முகின்றது
ரஜினி பேசியது 3 வரிகள்தான்
1971ல் ராமன் படம் எரிக்கபட்டது
சொன்னது உண்மை
மன்னிப்பு கேட்கமாட்டேன்
இந்த 3 வரிகள்தான் 70 வருட இரும்பு கோட்டையினை தகர்த்து அவர்களை அலற வைத்திருகின்றது
சரி, ஏன் இப்படி புலம்பி அஞ்சுகின்றார்கள், ராமன் படத்தை செருப்பால் அடித்தோம் எனும் மாபெரும் வீரசம்பவத்தை ஏன் ஒப்புகொள்ள அஞ்சுகின்றார்கள்
கொள்கைவாதியாக இருந்தால் ஏற்பாற்கள், இவர்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவா? இதனால் வருங்காலத்தில் தங்களுக்கு வருமானமும் இன்னும் பலவும் இழந்துவிடும் அல்லவா? அதனால் அஞ்சுகின்றார்கள்
அவர்கள் பகுத்தறிவு எப்பொழுதும் பல்லை காட்டும்தான், ஆனால் மகா கேவலமாக பல்லை காட்டுவது இப்பொழுதுதான்