இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்
தற்போது காவல்துறையால் அதிதீவிரமாக தேடபடும் நபர் காஜா மைதீன், “அல் ஹந்த்” எனபடும் பயங்கராவத அமைப்பை ஐ.எஸ் ஆதரவோடு நடத்தி இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்
அன்னார் கொஷ்டியே வில்சன் எனும் காவலரை மேலே அனுப்பியது, அதில் இருந்து அதிதீவிர தேடல் நடக்கின்றது
இந்த காஜாமைதீனை கேரளாவிலும் கன்னடத்திலும் அலசி தேடினால் அவன் சென்னையில் 20 நாட்களாக இருந்திருக்கின்றான், சாலையில் அசால்ட்டாக நடந்து டீ குடித்திருக்கின்றான், அப்படியே பீடிகட்டு வாங்குவது போல துப்பாக்கி வாங்கியிருக்கின்றான்
நிச்சயம் பழனிசாமிக்கு இது நெருக்கடியான செய்தி
தமிழக துப்பாக்கி நடமாட்டம் போதை நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் மத்திய அரசு தமிழக அமைதிக்கு விருது கொடுப்பதெல்லாம் மாபெரும் காமெடி
எனினும் எதிர்கட்சி நினைத்தால் பயங்கரவாதிகள் நடமாட்டம் என பழனிச்சாமியினை கதற வைக்கலாம், ஆனால் சிறுபான்மை வாக்குகளை இழக்கவிரும்பாத திமுக அமைதி காக்கத்தான் செய்யும் அவர்கள் அரசியல் அப்படி
விஷயம் விஸ்வரூபமாகின்றது, உலகம் தேடும் தீவிரவாதி சென்னையில் உலாவியிருக்கின்றான், இன்னும் எங்கெங்கு சென்று யாரை பார்த்தானோ?
ச்சே.. இல்லை..அவரை விட்டுவிடுங்கள்
நெல்லை கண்ணனை எல்லாம் அவன் சந்தித்ததாக செய்தியில்லை, “என்ன பெரியவரே காஜா மைதீனும் நீங்களும் டவுணில் இடியாப்பமும் சொதியும் சாப்பிட்டீர்களாமே? அப்படியா” என கேட்டால் மறு நிமிடமே நெல்லை கண்ணன் செத்தே விடுவார்
ஒருமுதியவரை கொன்ற பாவம் வேண்டாம், அவரிடம் ஏதும் கேட்டு தொலைத்துவிடாதீர்கள்