ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது
3 ஏவுகனைகள் ஏவபட்டிருக்கின்றன , அதில் ஒன்றை அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் வீழ்த்தியிருக்கின்றது, மீதி இரண்டை தங்களால் தடுக்க முடியவில்லை என்கின்றது அமெரிக்கா
ஆம், அவை குறி தவறி வேறு எங்கோ சென்றன, விலகி செல்லும் சனியனை அதன் போக்கில் விட்டுவிட்டது அமெரிக்க தடுப்பு சாதனம்
இந்நிலையில் சிரியாவில் ரஷ்ய ராணுவமுகாமின ஆளில்லா ட்ரோன் தாக்க சென்றிருக்கின்றது அதை ரஷ்ய ஏவுகனை தடுப்புகள் சரியாக அடித்து வீழ்த்தியிருக்கின்றன
ஆக அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களின் ஏவுகனை தடுப்பு சாதனைகளை அட்டகாசமாக சோதிக்கின்றன என்பதுதான் நிஜம்
தங்கள் நாட்டுக்கு வெகு தொலைவில், அடுத்த நாட்டு மக்கள் மத்தியில் தங்கள் நவீன ஆயுதங்களை சோதிக்க வழி வகையும் செய்துவிட்டு களத்தை குழப்பிவிட்டு களத்தில் தங்கள் பலத்தை சோதிக்கின்றார்கள் அல்லவா?
இதன் பெயர்தான் முழு அயோக்கியதனம், ஆனால் அரசியல் மொழியில் ராஜதந்திரம், சர்வதேச அரசியலில் தீவிரவாதத்துக்கு எதிரான போர்
முழு எண்ணெய் இருந்தும் வளமும் இருந்தும் தங்களுக்குள் சண்டையிட்டு அடுத்தவனுக்கு இடம் கொடுத்து அழிகின்றார்கள் அல்லவா?
இதன் பெயர்தான் இளிச்சவாய்தனம் அல்லது அறியாமை
அரேபியர்களுக்கு தேவை மதம் அல்ல, மாறாக நல்ல விழிப்பும் மகா ஒற்றுமையும் நல்ல சிந்தனையும்
அதை இன்னொரு நபிபெருமான் வந்துதான் கொடுக்கமுடியும் போல..