கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது

கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது, இந்துமதமும் சாதியும் பார்ப்பானுக்கு லாபமான விஷயம் அவற்றால் பலனடைபவன் அவனே என கிளம்பிவிட்டார்கள்

இந்துமதம் எல்லோருக்கும் பொதுவானது, கிறிஸ்துவத்தில் சேர ஞானஸ்நானம் இன்னபிற முழுக்கு சடங்கு உண்டு, இஸ்லாமுக்கும் உண்டு

ஆனால் இந்துமதத்தில் அப்படி ஏதுமில்லை திறந்த கடல் அது, மானிடன் மட்டுமல்ல மாடும் காகமும் கூட சேரலாம் அப்படியான மிக திறந்தமதம் பிராமணருக்கு மட்டும் அல்ல‌

பிராமணன் அங்கொரு கூலிக்காரன், அன்று அரசகட்டுபாட்டில் ஆலயம் இருந்தது அவனுக்கே முதல்மரியாதை இன்னபிற, இன்றும் பெரும் தனசுவாந்தாருக்கு அது பரிவட்டம் கட்டுதல் என தொடர்கின்றது

ஆலய பணி சாமான்பம் அல்ல, அதிகாலை 3 மணிக்கு எழுந்து சில சாங்கியம் செய்து 6 மணிக்கு பக்தரை எதிர்பார்த்து, ஒவ்வொரு பக்தனுக்காகவும் பிரார்த்து அர்சனை செய்து இரவில் வெளியேற 10 மணி ஆகும்

உலகில் முழுநேர வேலை என சில உண்டு, அவற்றை விட்டு ஒரு நொடி நகரமுடியாது

ஆடுமாடு மேய்த்தல், உணவகம் என மிக சில தொழில்கள் அப்படி உண்டெனினும் மகா மகா சிரமமானது அர்ச்சகர் பணி, ஒரு நாள் அருகிருந்து பார்த்தால் அதன் சிரமம் தெரியும், பக்தன் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகின்றான்

அவர்களுக்கோ ஆயிரம் பக்தர்கள், ஆயிரம் முறை மந்திரம் சொல்லும் நிர்பந்தம் இன்னபிற‌

நிச்சயம் எல்லா பிராமணனும் அர்ச்சகர் அல்ல, அது மிக சிலரே மற்ற பிராமணர்கள் பற்றி கவலை கொள்வார் யார்? அவனுக்கு இட ஒதுக்கீடும் கிடையாது இன்னபிறவும் கிடையாது

அரசன் காலத்திலாவது பிராமணருக்கு சில ஆதரவு இருந்தது, இன்று என்ன இருக்கின்றது?

இந்துமதம் பார்ப்பானுக்கு லாபம் என்றால் பழநி முதல் எல்லா இந்து ஆலய காணிக்கையும் யாருக்கு செல்கின்றது? அறநிலையதுறையில் எந்த பிராமணன் உண்டு?

சிலைகடத்தியது பிராமணா? இல்லை தர்மகர்த்தா பிராமணனா?

இந்துமதம் எல்லா உயிர்க்குமானது, அது பிராமண லாபம் என சொன்னால் அது ஈரோட்டு ராம்சாமி எடுத்த வாந்திகளில் ஒன்று

சாதி பிராமணனுக்கு ஆதரவாம்

இதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை

கருணாநிதி முதல்வரானார், ராமதாஸும் திருமாவும் கட்சி நடத்துகின்றனர், தலித் குபீர் புரட்சியாளர்கள் சம்பாதிக்கின்றனர்

இன்னும் யார் யாரெல்லாமோ சாதி பெயரால் என்னவெல்லாமோ செய்து பொருள் குவித்து சமுதாயத்தை மிரட்டி தனக்கு தானே சிலை வைத்து இல்லா அட்டகாசமெல்லாம் செய்கின்றனர்

சாதி பெயரை சொல்லி பொருள் குவித்தோ? பதவிக்கோ வந்த ஒரு பிராமணனை யாரும் பார்த்ததுண்டா, ஒருவனை கைகாட்ட முடியுமா?

உலகில் ஒவ்வொரு இனத்துக்கு ஒரு பணி இருந்தது, தொன்றுதொட்டு வந்த அந்த விஷயத்தை இன்னொரு இனம் செய்ய முடியாது

பிராமண இனம் தன் பாரம்பரியம் கொடுத்த சாஸ்திர சம்பிரதாயங்களையும் ஆலய வழிபாடுகளையும் உயிரை கொடுத்து காத்து வருகின்றது

இன்று அதில் வருமானமில்லை, அறநிலையதுறையினை தாண்டி ஐந்து பைசா அர்ச்சகர் கொண்டு செல்லமுடியாது, அறநிலையதுறையில் பிராமணர் இருப்பதுமில்லை

சல்லி காசு வருமானமில்லா ஆலயத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் அர்ச்சகர் உண்டு

மலேசியாவில் அர்ச்சகர்கள் பெரும்பாலும் இந்திய பிராமணர்களே, ஆனால் அவர்களின் சம்பளம்
சாதாரண கூலி தொழிலாளியினை விட குறைவே

அந்த இனம் தன் பாரம்பரியம் விட்டுவிட கூடாது எனும் வைராக்கியத்தில் எத்தனையோ சிரமங்களுக்கும் வலிகளுக்கும் இடையே மிக போராடி ஆன்மீக விஷயங்களை காத்து வருகின்றது

நிச்சயம் அவர்களும் வீழ்ந்தால் இந்துமதமும் வீழும்

கிறிஸ்துவத்தில் சி.எஸ்.ஐ பிரிவு பாதிரியின் பெயர் இன்றும் அய்யர், சபையில் அவரை அய்யர்வாழ் என்றுதான் அழைப்பர்

அய்யர் என்பது வேதம் ஓதும் குலமே தவிர ஒரு சாதிக்கான பெயர் அல்ல, அந்த பாதிரிகளை அய்யர் என அழைக்க கூடாது என ஒரு பிராமணனும் சண்டைக்கு செல்வதில்லை

காரணம் அய்யர் என்பது சாதிக்குரிய பெயர் அல்ல என்பதில் அவன் உறுதியாய் இருக்கின்றான்

கிறிஸ்தவ அய்யர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை கொஞ்சமல்ல, நிரந்தர பணி கொட்டும் வருமானம் குடும்பத்தாருக்கு எல்லாம் சிறுபான்மை கல்வி நிலையங்களில் வேலை என அரச குடும்ப வாழ்க்கை வாழ்கின்றன அவை

இஸ்லாமிய போதர்களின் நிலையும் மோசமில்லை, சாகிர் நாயக் போன்றோர் எந்த இஸ்லாமிய நாட்டிலும் போதகனாக குடியேறமுடியும்

பரிதாபத்துகுரிய பிராமணா அர்ச்சகன் என்ன வாழ்க்கை வாழ்கின்றான்? அவனுக்கு என்ன சவுகரியம் உண்டு

ஆலயத்திலும் அவன் வாழமுடியாது, ஆலயத்தை தாண்டி முன்னேறிய சாதி என சொல்லி வாய்புகளும் அவனுக்கு மறுக்கபடும்

அந்த பரிதாபத்துகுரிய இனத்தை வதைக்காதீர்கள், போலி அரசியல்வாதி அவன் சுயநலத்துகாக கத்தும் வன்மத்தில் வெறியேறி அவர்களை வெறுக்காதீர்கள்

ஆண்டவன் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றான், மிதமிஞ்சிய அட்டகாசமும் வெற்று கூச்சலும், வீண் வெறுப்பும், அகங்காரமும் அவனுக்கு வெறுப்பானவை

பிராமணை திட்டி வெறுக்க வெறுக்க உங்கள் தலைமுறைக்கு பாவம் சேர்க்கின்றீர்கள் என்றுதான் அர்த்தமே அன்றி வேறல்ல‌

நாமும் கவனிக்கின்றோம்

பிராமண வெறுப்பை காட்டிய யாரும் வாழ்ததில்லை, ஆதரித்தோர் அழிந்ததுமில்லை

பிராமண வெறுப்பில் இருந்த ராம்சாமியின் குடும்பத்தாரான சம்பத் அரசியலில் காணாமலே போனார், பழைய கர்மா அவரின் மகனையும் விரட்டுகின்றது

அன்பழகனும், நெடுஞ்செழியனும் ஒப்புக்கு சப்பாகவே இருந்து ஒதுங்கினர்

பெரும் தந்திரசாலியான கருணாநிதியும் முரசொலிமாறனும் பிராமண வீடுகளிலே சம்பந்தம் செய்துகொண்டு பிராமணரை ஆதரித்தனர், பிராமண தொடர்பு வந்தபின்பே அவர்களின் காலம் மீண்டது, இதை அவர்களே மறுக்கமாட்டார்கள்

ஆழமாக சிந்தித்தால் உண்மை விளங்கும்

இச்சமூகத்தில் பொய்யான அரசியலுக்காக வஞ்சிக்கபட்ட அந்த பரிதாபத்துகுரிய இனத்தை விட்டுவிடுங்கள், அந்த இனம் பக்தியும் அறிவும் மிக்கது

பக்தியும், அறிவும் மிக்க இனத்தை ஓட விரட்டும் சமூகம் ஒரு காலமும் உருப்படாது, அதை ஆதரிக்கும் இனமும் நாடும் வாழும்

மிக சிறந்த உதாரணம் வேண்டுமென்றால் யூதனை ஆதரிக்கும் நாடும் இனமும் அமெரிக்கா போல ரஷ்யா போல வாழும்

அவர்களை ஒழிக்க நினைத்த இனம் ஹிட்லர் போல முசோலினி போல வாரிசே இன்றி அழியும்

உலகில் நேரடியாக பார்த்தும் , வரலாற்றில் இருந்தும் கற்க வேண்டிய பாடம் ஏராளம் உண்டு, அறிவும் மனமும் இருப்பவன் அதை உணர்ந்து கொள்ளட்டும்