கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது
உலகில் மிக குறைந்த விலையில் கிடைப்பவை தமிழக வாக்குகள், சில கோடிகள் இருந்தால் ஆட்சியினை வாங்கிவிடலாம்
ஆனால் அதைவிட சல்லிவிலைக்கு செல்கின்றது கச்சா எண்ணெய் விலை, ரஷ்யாவினை ஒழிக்கின்றேன் பேர்வழி என வெறிபிடித்து அலைகின்றது சவுதி
கொரோனாதான் உலக அடங்குதான் ஆனால் ரத்த ஒட்டம் இல்லா உடலா? எண்ணெய் ஓட்டம் இல்லா உலகமா?
ரஷ்யா மேல் உள்ள வெறியில் கச்சா எண்ணெய் ஆறு போல ஒன்றை ஓடவிடுங்கின்றது சவுதி, கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது
சவுதி தன் கையிருப்பு பணம் தன்னை காக்கும் அது தீருவதற்குள் ரஷ்யா அடங்கி பின் விலையினை ஏற்றினால் சிக்கல் தீரும் என நம்புகின்றது
ஆனால் பணம் என்பது பணமே, இதே அந்நிய செலாவணியினை நிரப்பவும் பிற்கால தேவைக்கும் கடும் எண்ணெய் எடுத்தால் நாம் நாசமாவோம் என்பது அதற்கு புரியவில்லை
ரஷ்யா இதை கூர்ந்து நோக்கி, ஆடட்டும் ஆடும்வரை ஆடட்டும் ஆனால் பின்னர் உருதெரியாமல் சரிவார்கள் என் நீண்டகால திட்டத்துக்கு தயாராகின்றது
சவுதியின் இந்த தாராளமய எண்ணெய் திட்டத்தால் வியாபாரிகள் வாங்கி குவிக்கின்றார்கள், நகரங்களில் குடிதண்ணீர் லாரிக்கு குடத்தோடு அலையும் பெண்கள் போல கப்பல் கப்பலாக வாரி குவிக்கின்றார்கள்
உலக எண்ணெய் கிடங்கெல்லாம் நிரம்புகின்றன, புதிய கிடங்குகள் உருவாகின்றன, கப்பல்களில் நிரப்பி நடுகடலில் நிறுத்துகின்றார்கள், புது புது குடோன்களுக்கு அலைகின்றார்கள்
ஆம் இப்பொழுது வாங்கி வைத்தால் பின் கொள்ளை விலைக்கு விற்கலாம் எனும் வியாபார திட்டம்
எண்ணெய் வியாபாரிகள் குடோனுக்கு அலைந்தால் நாம் ஒரு ஆலோசனை சொல்லலாம்
தமிழகத்தில் வெயில் கொளுத்துகின்றது, எல்லா குளமும் கிணறும் விரைவில் வற்றும் பின் எப்பொழுது நிரம்பும் என அவற்றுக்கே தெரியாது பல மாதமாகும்
அதன் பின் அவற்றை தகுத்த பாதுகாப்புடன் எண்ணையால் நிரப்பி மூடிவையுங்கள், வாடகையினை சரியாக கொடுங்கள் அது விவசாயி தலைமுறையினை பலகாலம் காப்பாற்றும் அது பொதும்
அதுவும் போக கொடுமுடியாறு அணை என வெற்று அணை ஒன்றும் இருக்கின்றது, காண்டிராக்டரும் கட்சிக்காரனும் பலன்பெற கட்டபட்ட அணை அது, அதில் நீங்களும் பலன் பெறுங்கள், விவசாயி பலன்பெறாத அணை உங்களுக்காவது பயன்படட்டும்
அதையும் நிரப்புங்கள் வாடகை பணம் அரசுக்கு வருமானமாகும்