குடியுரிமை சட்டம் கடவுளுக்கு எதிரானதா?

கொரோனாவினை சாக்காக வைத்து குடியுரிமை சட்டத்தை அயோக்கிய கிறிஸ்தவ கும்பல் மாபெரும் மோசடியாக சித்தரிகின்றன, இவை நற்செய்தி அல்ல மோசடி செய்தி

இதுபற்றி அறிய பழைய ஏற்பாடு எனும் யூத நூலின் தகவல் தெரியவேண்டும்

எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த இஸ்ரவேலர் எனப்படும் ஆபிகாமின் சந்ததிகள் ஆபிரஹாமின் கொள்ளு பேரன்களான 12 பேரின் வாரிசுகளாக அறியபடுவர், இவர்களுக்கு வாக்களிக்கபட்டதுதான் இந்த இஸ்ரேல்

அவர்கள் அன்றைய பெலிஸ்தினா அல்லது கானான் தேசத்தை ஆக்கிரமித்தபின் தங்களுக்கும் அரசன் வேண்டும் என கேட்டார்கள், கடவுளோ அரசனின் இயல்பான பலவீனத்தை சொல்லி நானே உங்களுக்கு அரசன் என்றார்

அதெல்லாம் இல்லை போய்யா என சொல்லிவிட்டு சவுல் என்பவனை அரசனாக்கினார்கள் இஸ்ரேலியர். அதன் பின் தாவீது என்பவனை கடவுள் அனுப்பி இவனையவாது வைத்து அழுங்கள் என சொல்லிவிட்டார்

சந்தேகமில்லை இன்றுவரை யூதரின் நம்பர் 1 அரசன் தாவீது, ஜெருசலேமினை பிடித்தது முதல் போர்,ஆட்சி என பெரும் அடித்தளம் அவன் கொடுத்தது, அவன் மகன் சாலமொன் ஞானி ஆனால் தாவீது அளவு புகழ் அவனுக்கு இல்லை

இந்த தாவீதுதான் இப்பொழுது அழிச்சாட்டிய கும்பல் சொல்லும் குடியுரிமை சட்டத்தை இழுத்தான்

அதாவது ஆபிரகாமின் கொள்ளுபேரன்கள் 12 பேர் சேர்ந்த சந்ததிதான் இஸ்ரேலியர், தாவீது இதில் யூதா எனும் கொள்ளுபேரனின் வம்சம்

தாவீதுக்கு மற்ற இனத்து எண்ணிக்கை எவ்வளவு, அவர்களால் தனக்கு ஆபத்து உண்டா இல்லையா? வேறு கொள்ளுபேரன் அது ரூபனோ, நெப்தலி வம்சமோ யூதாவின் வம்சம் என்றால் தனக்கு ஆபத்தல்லவா?

அப்படி இருக்கும் பட்சத்தில் எங்காவது போர் நடத்தி அவர்களை முன்னுறுத்தி கொல்லவேண்டும் எனும் விபரீத திட்டம் இருந்தது

அதாவது யூதன் ஆளவேண்டும் மற்றவரை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கில் அவன் குடியுரிமை கணக்கெடுக்க உத்தரவிட்டான், கடவுளுக்கு பொறுக்கவில்லை அவனை தண்டித்தார், அப்புறமாக “என் செல்லமே அழாதே” என சேர்த்தும் கொண்டார்

இதைத்தான் இப்பொழுது பிடித்து கொண்டு அய்யயோ குடியுரிமை சட்டம் கடவுளுக்கு எதிரானது அதை கையில் எடுக்கும் நாடு உருப்படாது கொரோனா இந்தியாவுக்கு கடவுளின் தண்டனை என ஒப்பாரி வைக்கின்றது அழிச்சாட்டிய கிறிஸ்தவ கோஷ்டி

இது மனம் அறிந்து, பரிசுத்த ஆவியினை நெருப்பில் எறிந்து, இயேசுவினை அடக்கம் செய்து , பைபிளை கிழித்துவிட்டு மொடி வெறுப்பில் சொல்லபடும் செய்தி, மோசடி

ஒவ்வொரு நாடும் அப்படி குடிகணக்கினை எடுக்கின்றன‌

அமெரிக்கா, கன்டா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் என எல்லாமும் கிறிஸ்தவ நாடுகளே ஆனால் தங்கள் குடிமக்கள் யார்? வந்தேறிகள்யார்? அகதிகள் யார்? என நுனிவிரலில் தகவல் வைத்திருக்கின்றது

அப்படியானால் அவை எல்லாம் கடவுளின் கட்டளையினை பைபிளை மீறுகின்றதா?

தாவீது காட்சி வேறு , இப்போதுள்ள உலக நிர்வாகம் வேறு

இரண்டையும் குழப்புவது உள்நோக்கம் கொண்ட மோசடியும், கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்திய அரசை பற்றிய மகா தவறான கருத்தை புகுத்துவதாகும்

நல்லவர்கள் இத்தாலி, கனடா, பிரிட்டன், ஜெர்மனிடம் சிரிய அகதிகளை படாதபாடு படுத்தி குடியுரிமை கொடுக்க்காமல் வதைத்ததாலே தேவன் உங்களை தாவீதை போல வதைக்கின்றார் என சொல்ல தயாரா?

சொல்வார்களா?

மாட்டார்கள், கிறிஸ்தவ தேசங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்நாட்டின் நலனுக்காக மோடி எடுக்கும் குடியுரிமை சட்டங்களை பைபிளோடு சம்பந்தமில்லாமல் திணிப்பது அயோக்கியதனம்

சுயநலனுக்காக தாவீது செய்தான் அடிவாங்கினான், அவன் இதில் மட்டுமா வாங்கினான் அடுத்தவன் மனைவியினை அபகரித்து எத்தனையோ இடங்களில் அடிவாங்கினான்

ஆனால் மோடி நாட்டு நலனுக்காக எல்லா நாடுகளையும் போல கணக்கெடுத்தால் அதையும் தாவீது என்பவன் சுயநலனுக்காக எடுத்த சட்டத்தையும் சம்பந்தபடுத்தினால் இவர்களுக்கு அய்யோ கேடு

இயேசுவே ரோமருக்கு கட்டுபட்டு வரி கட்டினார், இவர்கள் இயேசுவினையே தூக்கி போட்டு மிதிக்கும் சாத்தானிய கூட்டம்

கொடிய சாத்தானிய கூட்டம், இவர்களால் ஒரு காலமும் தேசம் நன்மை பெறாது

பழைய ஏற்பாட்டை எடுத்து எதை பின்பற்றுகின்றார்கள்?

வருமானத்தில் 10ல் ஒரு பங்கு காணிக்கை என்பதை தவிர எதை பின்பற்றுகின்றது?

பழைய ஏற்பாட்டில் கல் எறிதல், ஆடு பலி மாடுபலி என ஏக உண்டு, தொழுநோய் நோயாளி தண்டனை என நிறைய உண்டு அதை எல்லாம் செய்வார்களா?

காலத்துக்கு ஏற்றபடி யூதர்களே மாறிவிட்டார்கள்

பழைய ஏற்பாடுபடி பலி கொடுத்தலும் கல்லால் எறிதலும் சரியல்ல , குடியுரிமை கணக்கு எடுத்தேதீர வேண்டும் என அவர்களே மாறிவிட்டார்கள்

யூத உடை எங்கே? யூத கட்டுபாடுகள் எங்கே? பலி எங்கே? எதுவுமில்லை அவர்கள் மாறிவிட்டார்கள் வாழ்கின்றார்கள்

அவர்களே மாறியபின் இந்த அழிச்சாட்டிய கோஷ்டி அட்டகாசம் செய்வது ஏன்?

அட தாவீதின் வாரிசுகளான யூதர்களே குடியுரிமை எல்லாம் எடுத்து இஸ்ரேலின் குடியுரிமை கணக்கை மிக சரியாக வைத்திருக்கின்றார்கள், அதைபற்றி ஏன் இக்கும்பல் பேசவில்லை

ஆக கிறிஸ்துவ தேசங்களை பேசமாட்டார்கள், யூத தேசத்தை மூச்சுவிட் மாட்டார்கள், ஆனால் இந்து தேசம் கணக்கெடுத்தால் மட்டும் அய்யய்யோ தாவீது மன்னன் என பொங்குவார்கள்…