உலக கொரோனாவின் மொத்த சுருக்கம் இதுதான்.

கொரோனா ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக வெடித்து பரவுகின்றது, 1.3 லட்சம் மக்கள் பாதிக்கபட்ட அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது, கிட்டதட்ட 1 லட்சம் மக்களுடன் இத்தாலி இரண்டாமிடமும் சில ஆயிரம் இடைவெளியில் சீனாவிடம் மூன்றாம் இடத்தை விட்ட ஸ்பெயின் 4ம் இடத்தில் இருக்கின்றது

ஜெர்மனி 6ம் இடமும் அதை தொடர்ந்து பிரான்ஸ் போர்ச்சுகல் நெதர்லாந்து என பழைய தாதாக்கள் வருகின்றார்கள்

இந்தியா 987 கொரோனா நோயாளிகளுடன் 36ம் இடத்தில் இருக்கின்றது, இதில் 100 பேர் புதிய நோயாளிகள் , 27 பேர் இறந்திருக்கின்றார்கள்

உலக கொரோனாவின் மொத்த சுருக்கம் இதுதான்

இதுவரை 31 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றார்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் குணமடைந்திருகின்றார்கள்

இப்பொழுது 5 லட்சம் பேர் பாதிக்கபட்டு குணமடையும் நேரத்தை நெருங்கிவிட்டார்கள், 25 ஆயிரம் பேர் உச்சகட்ட போராட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருக்கின்றார்கள்.

உலகம் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றது

சீனாவில் புதிய தொற்றும் இல்லை, சாவும் இல்லை என அந்நாடு சொன்னாலும், நேற்றும் சிலர் இறந்திருக்கின்றார்கள் அதற்கு காரணம் கேட்டால் கர்பப்பை கோளாறு என சிரிக்காமல் சொல்கின்றது சீனா, இறந்தவர்களில் ஆண்களும் உண்டு என்பதுதான் விஷயம்