உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும்.

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம் அல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது

மாபெரும் வல்லமையுடன் விளங்கும் அந்நகரங்கள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும், பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கோபத்தின் வெளிப்பாட்டில் பெரிதாக அடிவாங்கி கொண்டிருக்கும்

பாபிலோன், எகிப்தின் நகரங்கள், டமாஸ்கஸ், தாஷ்கண்ட், காபூல் , உலன்பட்டார் (மங்கோலியா) என் ஆசிய நகரங்களாகட்டும். பாரீஸ், ரோம் உட்பட ஐரோப்பிய நகரங்களாகட்டும் எவ்வளவு உயர்ந்து ஒளிவீசுமோ அந்த அளவு அழிவுகளையும் சந்திக்கும்

அப்படி 400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட நியூயார்க் முதல் முறையாக பேரழிவினை சந்திக்கின்றது, கண்ணுக்கு தெரியாத சக்தி அதை நொறுக்கி தள்ளுகின்றது

பாபிலோன் போன்ற பெரு நகரங்களின் வீழ்ச்சியினை அது சந்திக்கின்றது

எமக்கு நன்றாய் நினைவிருக்கின்றது, பண்டைய பெருமையான பாபிலோனை மறுபடியும் கட்டி எழுப்பினான் சதாம், தன் பாரம்பரியத்தை மீட்கும் அவன் ஆர்வம் அப்படி இருந்தது

யூதன் ஜெருசலேமினை எழுப்பினால் கர்த்தரின் ஆசீர்வாதம், ஆனால் சதாம் பாபிலோனை எழுப்பினால் அது இறுமாப்பு என்பது கிறிஸ்தவ அழிச்சாட்டிய கும்பலின் நம்பிக்கை

வளைகுடா போர் மற்றும் 2004ல் நடந்த போரில் அமெரிக்கா சதாமின் கனவான பாபிலோனை நொறுக்க்கி தள்ளியது

“பார்த்தீர்களா , பாபிலோன் கடவுளின் சாபமிக்க நகரம், 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கடவுள் சபித்தார், அற்ப சதாம் அதை நீக்க முடியுமா?, பாபிலோனை தொட்டதே சதாமின் அழிவு” என உரக்க கத்தினார்கள்

நியூயார்க்கின் அழிவு பாபிலோனில் அவர்கள் செய்ய ஆரம்பித்த சில காரியங்களின் வெளிப்பாடாக இருக்கலாம் என்கின்றது இந்த பிரமீடு கோஷ்டி ஆய்வுகள்

ஆம் அலெக்ஸாண்டரும் நெப்போலியனும் எகிப்து பிரமீடில் கைவைத்த பின்பே பெரும் அழிவுகளை சந்தித்தார்கள் , அப்படி பாபிலோன் எனும் ஈராக்கின் பூமியில் கைவைத்த சில சூட்சும சக்திகளின் சாபம் அமெரிக்காவினை மிரட்டுகின்றது என கிளம்புகின்றது கோஷ்டி

இந்த நேரம் நாம் சும்மா இருந்தால் எப்படி?

காசி எனும் மகா புண்ணிய நகரில் கைவைத்ததாலும், சோம நாதபுரி போன்ற ஆலயங்களை இடித்து கொண்டு செல்லபட்ட கொள்ளை செல்வத்தால் வாழ நினைத்த ஆப்கானிஸ்தான் இன்று தரித்திர தேசமாய் அனுதினமும் ரத்தத்தில் குளிக்கும் தேசமாய் அலைபாய்கின்றது, அதன் சாபங்கள் அவர்கள் காசி பூமியில் மன்னிப்பு கேட்கும் வரை தீராது..