அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு.

சர்வ சக்திவாய்ந்த அமெரிக்கா கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பின் பெரும் வீழ்ச்சியினை காண்கின்றது, அதன் வல்லமை மிக்க கரங்களும், பெரும் அதிகாரமும் வீழ்ந்து கொண்டிருக்கின்றது

ஆனால் முடிந்தவரை போராடுவார்கள் அல்லவா? சும்மா இருபார்களா என்ன?

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு ஒன்றை டிரம்ப் உருவாக்கியுள்ளார். அவர்கள் பெரும் வழிகாட்டலை கொடுப்பார்கள், புது புது ஆலோசனைகளை கொடுப்பார்கள், அந்த ஆலோசனைகளில் சிறந்ததை அமெரிக்க அரசு செயல்படுத்தும்

இந்த குழுவில் அமெரிக்காவின் ஆக சிறந்த அறிவாளிகள், பெரும் திறமையாளர்கள் என தேடி சலித்து எடுத்திருகின்றார்கள், அதில் இந்தியர் 6 பேர் இடம் பெற்றிருப்பதுதான் உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றது

ஆம் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோ சாப்ட்), அரவிந்த் கிருஷ்ணா (ஐ.பி.எம்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (மைக்ரான்), அஜய் பங்கா , முகர்ஜி (மாஸ்டர் கார்டு), ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆம் இவர்கள் நேரடியாக டிரம்புக்கே ஆலோசனை கூறும் பெரும் அதிகாரம் வழங்கபட்டிருகின்றது

இவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், ஒரு காலத்தில் இந்திய அரசர்கள் தங்கள் ஆலோசகர்களாக வைத்திருந்த பிராமணர்களின் வாரிசுகள்

“இயங்கும் தேசத்தில் அவனவனுக்கு ஆயிரம் வேலைகள் , எல்லோரும் எல்லா விஷயத்திலும் கவனம் செலுத்தி யோசிக்க முடியாது, சமூகத்துக்கும் அரசுக்கும் என்ன வேண்டும்? என்ன தேவை? என்ன செய்ய வேண்டும் என ஒதுங்கி இருந்து பார்க்க ஒருவன் வேண்டும்.

எல்லாவற்றையும் அவன் கவனித்திருந்து பார்க்க வேண்டும், நிறைய யோசிக்க வேண்டும், சமூகத்தை உற்று பார்த்து கொண்டே, அது குழம்பும் பொழுது அவன் தாங்கிபிடிக்க வழிகளை சொல்லவேண்டும்

ஆம் மிக உயர்ந்த இடத்திலிருந்து சமூகத்தை பார்த்து கொண்டிருப்பவனே பார்ப்பான்.

சமூகம இயங்க, நாடு செழிக்க என்ன செய்யவேண்டும் எனும் திட்டம் அவனிடமே உண்டு, அவனே முழுவதும் சமூகத்தை உணர்ந்து பார்த்து கொண்டே இருக்கின்றான்”

அன்று இந்தியா இந்த வரிகளை பின்பற்றித்தான் தன் பொற்காலத்தின் உச்சியில் இருந்தது, உலகமே இந்தியாவினை தேடி வந்தது

இன்று அந்த வரிகளை அமெரிக்கா செய்து கொண்டிருக்கின்றது, இனி அந்நாடு மீண்டெழும் என்பதில் சந்தேகமில்லை

இதே பிராமணன் இங்கே இருந்து ஆலோசனை சொல்லும் வரை தமிழகம் பெரும் பொன்விளையும் பூமியாய் இருந்தது, கிரேக்கர் ரோமர் இன்னும் யார் யாரெல்லாமோ வந்து தமிழகத்தை கண்டு வியந்து நின்றனர்

ராம்சாமி கோஷ்டியின் அழிச்சாட்டியத்தில் பல பிராமணர் வெளிநாடு சென்றாயிற்று, இதோ மேலை நாடுகள் வாழ்கின்றன.

இந்த புத்தாக்க குழு அமெரிக்காவினை நிச்சயம் உயர்த்தும், கொஞ்ச காலத்தில் அமெரிக்கா தன் வலிமையினனி மீள பெறும்

அதன்பின் என்ன செய்வார்கள் தெரியுமா?

வெள்ளை மாளிகையின் ரகசிய அறையில் இருக்கும் ராம்சாமி, அண்ணா இன்னும் சிலரின் படங்களுக்கு மாலையிட்டு மஞ்சளிட்டு வணங்குவர் அமெரிக்க அதிகார பீடத்தார், ஆம் அவர்கள் இல்லையென்றால் பிராமணன் ஏன் கடல்கடக்க போகின்றான்? அமெரிக்காவினை வாழவைக்க போகின்றான்?

ஆக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ராம்சாமி, அம்பேத்கர் கோஷ்டி செய்திருப்பது கொஞ்சமல்ல..

பிராமணன் அண்டிய அமெரிக்கா வாழ்கின்றது, அவனை விரட்டிய மண் “கரணாவுக்கு செத்தால் 1 கோடி” என பம்பர் பரிசு அறிவித்து கொண்டிருக்கின்றது.