சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது.
நேபாள அமைச்சர் ஒருவரும், பிரதமர் ஓலியும் ஒரு வரைபடத்தை வைத்து கொண்டு இந்தியா எங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது என கூப்பாடு போட்டதற்கு இந்தியா பதிலேதும் சொல்லவில்லை
காரணம் இரு நாடுகளும் ஒப்புகொண்ட வரைபடம் உண்டு, அதில் சர்ச்சைகுரிய பகுதிகள் இந்திய பகுதி என்பது என்றோ தீர்வாயிற்று
நேபாளத்தில் சில குழப்பவாதிகள் தூக்கிதிரியும் படம் நேபாள அரசால் அங்கீகரிக்கபட்ட படமல்ல என்பதால், அது மெட் இன் சைனா என்பதால் இந்தியா அதன் போக்கில் இருந்தது.
(நாம் தமிழர் கோஷ்டி வைத்திருக்கும் அகண்ட ஈழம் அல்லது தமிழ்நாட்டு படத்தை யாராவது கண்டு கொள்வார்களா? அப்படி)
சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது,
அதன்படி இந்த வில்லங்க மேப்பினை அதாவது சீனா உருவாக்கி கொடுத்த வரைபடத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதன் பின் அது அங்கீரமாகிவிடும் அதன் பின் இந்தியா அலறும் என சொல்லிகொடுத்தது
நேபாள சீன அடிமை ஓலியும் அதை பாராளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்கின்றார், ஆனால் ஆளும் கட்சி எதிர்கட்சி என யாரிடமும் ஆதரவில்லை
காரணம் இந்திய நேபாள உறவு அப்படியானது, நேபாள ராணுவ தளபதியே சம்பிரதாயத்துக்கு இந்திய குடியரசு தலைவர் கையாலே பதவி ஏற்பார்
இதுபோக ஏக தொடர்புகள் உண்டு, இதனால் நேபாளத்தில் இம்மாதிரி குழப்பங்களுக்கு ஆதரவில்லை, நேபாள ராணுவத்துக்கே கடும் ஆத்திரம், அவர்கள் இந்தியாவுடன் நல்லுறவினை விரும்புபவர்கள்
விஷயத்தை கவனிக்கும் சீனா, நேபாள காமெடி அடிமையினை அந்த திருட்டு வரைபடத்துடன் ஐநாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கின்றது
இந்தியாவோ “டேய் காமெடி செய்யாதீர்கள், காஷ்மீர் சிக்கலையே ஐ.நாவில் ஒன்றுமில்லாமல் செய்தவர்கள் நாங்கள், இவனுக வேற புதுசு புதுசா படம் வரைஞ்சி விளையாடிகிட்டு” என அதன் போக்கில் இருக்கின்றது