இந்திய சீன முறுகலில் ஒரு நாடு கனத்த அமைதி , அது யாரென்றால் ரஷ்யா.
என்னதான் கொரோனா என்றாலும் அமெரிக்கா வரதுடித்து என்னவெல்லாம் சொல்லும் களத்துக்கு ரஷ்யா வராமல் இருப்பது ஆச்சரியமாக பார்க்கபட்டது
இப்பொழுது இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் எதையோ சம்பிரதாயத்துக்கு சொல்லியிருக்கின்றாரே தவிர விஷயம் வேறு எங்கோ செல்கின்றது
இந்தியாவும் சீனாவும் வைத்திருப்பது ரஷ்ய சாதனங்களே, இனி யுத்தம் என வந்தால் ரஷ்ய ஆயுதங்களே இருபக்கமும் பாயும்
பாகிஸ்தானும் பெரும்பாலும் இப்பொழுது சீனாவுடன் சாய்வதால் இனி இந்திய எல்லையில் எந்த யுத்தம் வந்தாலும் ரஷ்ய ஆயுதமே வெடிக்கும்
சீன தயாரிப்பு சில உண்டு என்றாலும் சீனா பெரிதும் நம்புவது ரஷ்ய எஸ் 400 சாதனம் உட்பட சில ரஷ்ய தயாரிப்புகளே
இந்தியா இதை எப்பொழுதோ உணர்ந்துதான் அமெரிக்காவிடமும் கைகொடுக்க தவறவில்லை, இரு நாடுகளும் ரஷ்ய ஆயுதமே பயன்படுத்துவது என்பது முழுக்க சரியுமல்ல, முழு தவறுமல்ல
எவ்வளவு பாதுகாப்போ அவ்வளவுக்கு பாதுகாப்பு குறைபாடும் அதுவே
ஆனால் இந்தியாவுக்கு எப்பொழுதும் ரஷ்ய ஆயுதங்களுக்கு பதிலீடு தேவை என்பதால் இந்தியா அமெரிக்க பக்கமும் மெல்ல சரிகின்றது
அமெரிக்காவுக்கு இந்தியா எந்நாளும் விருப்பமான நாடே, ஆனால் நேரு மற்றும் காங்கிரஸின் முடிவே அவர்களை பாகிஸ்தான் பக்கம் தள்ளியது
இப்பொழுது இந்தியா மெல்ல அமெரிக்க பக்கம் சரிகின்றது
இதன் விளைவாக ரஷ்யாவும் மெல்ல பாகிஸ்தான் பக்கம் சரிகின்றது, சில அறிக்கைகள் அதை தெளிவாக சொல்கின்றன
உலக அரசியலும் இப்படித்தான் அடிக்கடி மாறும். ஆளாளுக்கு நெருங்குவார்கள் பின் மாறுவார்கள் ஒருவரை ஒருவர் ரகசியமாக எச்சரிப்பார்கள், அவர்கள் மொழி அவர்களுக்குத்தான் புரியும்
இப்பொழுது உலகுக்கு புரிவது என்னவென்றால் மோடியின் இந்தியா வலுவான கூட்டணிகளை உலகுக்கு வழங்குகின்றது
பாகிஸ்தானை கைகழுவிட்டு இந்தியா பக்கம் சாயும் அமெரிக்கா இனி பெரும் ஆச்சரியங்களை இந்தியாவுக்கு கொடுக்கும்
ஏற்கனவே சீனபிடியில் கழுத்து கை கால் என இருக்கும் பாகிஸ்தானில் எஞ்சியுருப்பது சில விரல்களும், தலை முடியுமே. அதையும் ரஷ்யாவிடம் கொடுத்துவிட போகின்றது பாகிஸ்தான்
பாவம் அவர்கள் ஜாதகம் அப்படி.