வாழ்த்துக்கள் புட்டீன்…

Image may contain: 1 person

 ரஷ்ய தேர்தலில் புடின் அபரிமிதமான வெற்றியினை மறுபடியும் பெற்றிருக்கின்றார்.

வெற்றி எப்படி என்றால், எதிர்கட்ட்சி முடக்கபட்டது. களத்தில் நின்ற ஒரே பிரபலம் புட்டின். மொத்தம் பதிவான வாக்குகளே 40% கீழ்தான். அதாவது எப்படியும் புட்டீன் தான். தோற்றாலும் அவர் எப்படியும் வந்துவிடுவார், எதற்காக ரிஸ்க்? என மக்கள் ஒதுங்கிகொண்டார்கள்.

ஆனால் புடீன் ஆட்சியும் மோசம் இல்லை, உலக அரங்கில் 1980க்கு பின் ரஷ்யாவினை உயர்த்தினார், ஈரான் போர் தடுக்கபட்டதும் அவராலே, சிரியா இன்னும் வீழாமல் இருப்பதும் அவராலே.

கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்ததும் அவராலே..உக்ரைனில் உலக நாடுகள் ஓரம்கட்டி ஒதுங்கி நிற்பதும் அவராலே..

எண்ணெய் விலை மட்டும் சரியாமல் இருந்தால், இன்று ரஷ்யா எங்கோ சென்றிருக்கும். இது உலகளாவிய பிரச்சினை அதிலிருந்து ரஷ்யாவினை மீட்க புடினால் மட்டும் முடியும் என ரஷ்யர்கள் நம்புகின்றார்கள்

மீண்டும் நாகரீகமான சர்வாதிகாரம் நோக்கி ரஷ்யா திரும்புகின்றது

இந்திய, ரஷ்ய மக்கள் மனநிலைக்கு நாகரீகமான சர்வாதிகாரமே சரிவரும் போலும்.

வரலாறு அதனைத்தான் திரும்ப திரும்ப சொல்கின்றது

வாழ்த்துக்கள் புட்டீன்..