ஒளவையரின் ஞானகுறள்
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 02″
ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து”
இந்த குறள் “ஈரெண் கலையில் நிறைந்த அமிர்தம் உண்ணில் பூரணமாகும் பொலிந்து”” என பிரிந்து பொருள் தரும்
கலை என்றால் இங்கு நாடிகள். அன்னாக்கில் ஊறும் அமிர்தத்தில் 16 நாடிகள் துலங்கும்,
“பன்னியிடும் மேதை, அருக்கீசம், விடகலையேபயில்விந்து, அர்த்தசந்திரன், நிரோதி நாதம்மன்னியிடும் நாதாந்தம்; சக்தி வியாபினியேவருசமனை உன்மனை, பன்னிருகலையாம் மருவும்மின்னிலகு சமனைக்கும் வியாபினிக்கும் நடுவேவியோமரூபினி அனந்தை அனாதை அனாசிருதைஎன்னும் ஒரு நாலுகலை பொருந்தியிடக் கலைகள்ஈரெட்டாய் உரைக்கும் அரன் இணையடிக்கீழ் “
இவையே.மேதை கலை, அருக்கீச கலை, விட கலை, பயில்விந்து கலை, அர்த்த சந்திரன் கலை, நிரோதி கலை, சக்தி கலை, நாத கலை, நாதாந்த கலை, வியாபினி கலை, சமனைகலை, வியோபினி கலை, வியோமரூபி கலை, அனந்தை கலை, அனாதை கலை, அனாசிருதை கலைஇப்படி 16 நாடிகள் உண்டு
மேதைகலை எனும் மூலாதாரம் முதல் மார்பு வரை இருக்கும், அருக்கீசகலை நாடி மார்பு முதல் தொண்டைகுழி வரையிலானது,
விடம் என்றால் கழுத்து விடகலை கழுத்து பகுதியில் ஓடும் நாடிபயில்விந்துகலை எனும் நாடி தொண்டை முதல் நாக்கின் வரையான பகுதியில் ஓடும்
மீதமுள்ள கலைகளெல்லாம் அன்னாக்கு முதல் சிரசு வரையான பகுதிவரை ஒவ்வொன்றாக சில அங்குல இடைவெளியில் அமைந்திருக்கும்மூலாதாரம் முதல் உச்சந்தலை வரை உள்ள இந்த பகுதிகளை 16 வகை நாடிகள் கட்டுபடுத்துகின்றன,
அமிர்தம் எனும் யோகதிரவம் சுரக்கும் பொழுது இந்த 16 வகை நாடிகளும் துலங்குகின்றனஅப்படி இவை துலங்கும் பொழுது முழு பூரணமான ஆத்ம மற்றும் தேஜஸ் பொலிவு ஏற்படும் என்பது ஒளவையின் வாக்குதிருமூலரின் பாடல் ஒன்று உண்டு
“காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே மேதை ” இந்த பாடல் சொல்லும் பொருளைத்தான் ஒளவையாரும் தன் குறளில் சொல்கின்றார்.