“அரசியல் புதிது” படத்துக்காக
“அந்த அரசியல் வாரிசு தலைவர் காரில் வந்து கொண்டிருக்கின்றார், மக்கள் 500 ரூபாய் வாங்கி கொண்டு கொடுக்கும் வரவேற்பில் 50 ரூபாய் வாங்கிய சிறுவனும் நிற்கின்றான்
சிறுவனை கண்டதும் முன்பு செய்த ஏற்பாட்டின் படி கார் நிறுத்தபடுகின்றது, மேக் அப் சரிசெய்யபடுகின்றது தலைவர் இறங்குகின்றார், கேமரா மேன் தயாரானதும் சிரித்தபடி சிறுவன் அருகில் சென்று புன்னகைத்து பழம் கொடுக்கின்றார் தலைவர்
சிறுவன் கேட்கின்றான்
“அந்த கார்ல இருக்குற படம் யாரோடது?
எங்க அப்பா
பக்கத்துல இருக்குற படம்?
என் பையன்
இவங்கெல்லாம் எப்படி தலைவரானாங்க?
தொண்டருங்க ஏத்துகிட்டாங்கப்பா
அப்ப தொண்டர் தலைவர் ஆகவே முடியாதா? அவங்களுக்கும் ஆசை இருக்காதா?”
அத்தோடு தலைவர் மிக அவமானமாக தன்னை உணருகின்றார், இனி தனக்கும் தன் மகனுக்கும் கட்சியில் இடமில்லை என சொல்லி கட்சி காரை ஒப்படைத்துவிட்டு தெருவில் இறங்கி நடக்கின்றார்”
“அரசியல் புதிது” படத்துக்காக பாதிராஜா இயக்கி கொண்டிருக்கும் காட்சியில் ஒன்று
சூப்பர். நன்றாக எடுத்து இருக்கிறார்