இலங்கையில் நடப்பது உள்நாட்டு சிக்கல், அங்கு அதிபர் கோத்தபாய அரசு நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்கின்றது, அவர்கள் அழைக்காமல் இன்னொரு நாடு உள்ளே செல்லமுடியாது அப்படி சென்றால் அது இறையாண்மையினை மீறும் செயலாகும்

இதனால் இந்தியா தன் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் வதந்தியினை அறிக்கை பூர்வமாக முறியடித்திருக்கின்றது, இந்திய ராணுவம் அனுப்பபடாது என இந்திய வெளியுறவுதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்

இலங்கை நிலவரம் இப்படி இருக்க ரஷ்யா உக்ரைனில் பெரிதாக அடிவாங்குகின்றது, கார்கிவ் நகரில் இருந்தும் ரஷ்யா அப்புறபடுத்தபடுகின்றது

ரஷ்ய ராணுவம் மிக பலமானது பேரழிவு ஆயுதங்களை கொண்டிருப்பது என்பதில் சந்தேகமில்லை ஆனால் ரஷ்யாவின் முழு பலமும் அந்நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே பாவிக்க அதுவும் போர் காலத்தில் பாவிக்கத்தான் அவர்கள் சட்டம் அனுமதிக்கின்றது

இந்த போர் ரஷ்யாமேல் தொடுக்கபட்ட போர் அல்ல மாறாக ரஷ்யா வலுத்து தொடங்கியது, இன்னமும் அதை போராக அறிவிக்காமல் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என்றுதான் புட்டீன் சொல்லிகொண்டிருக்கின்றார்

இதனால் பெரும் அழிவு ஆயுதங்களை ரஷ்யா பாவிக்க முடியாது, பாவித்தால் ரஷ்ய நிலமை இன்னும் மகா மோசமாகும்

ரஷ்யா கோடரியினை கையில் வைத்திருக்கின்றது ஆனால் தேனி கூட்டம் கொட்டும்பொழுது கோடரியால் என்ன பலன் இருக்க முடியும்? ரஷ்ய நிலை அப்படித்தான்

மிக மோசமான பின்னடைவில் இருக்கும் ரஷ்ய ராணுவம் தன் தரைபோரின் பெரும் பலமாக கருதும் சிறப்பு டாங்கிகளை இறக்கியிருக்கின்றது

இவை ஏவுகனையால் தகர்க்கமுடியாதவை பெரும் பாதுகாப்பு அம்சம் கொண்டவை, இது மிக சிறிய அளவில்தான் ரஷ்யாவிடம் உண்டு

அவற்றை களமிறக்கியிருக்கின்றது ரஷ்யா, அதாவது போரின் அடுத்த கட்டத்துக்கு செல்கின்றது

மேலை நாடுகள் உக்ரைனில் ரஷ்ய ஆயுதத்தையெல்லாம் சந்தித்துவிடுவது அல்லது வெளிகொணர்வது என சவால் எடுக்கும் வேளையில் அவர்கள் திட்டம் வெற்றியாகின்றது

இந்த டாங்கியும் தோற்கும் பட்சத்தில் உக்ரைன் தலைகீழ் வெற்றியினை பெறலாம்

அதாவது நிலமை இப்படி ரஷ்யாவினை பின்வாங்க வைத்தால் 2014ல் ரஷ்யா கைபற்றிய உக்ரைனின் கிரிமீயாவினை கூட உக்ரைன் மீள பிடிக்கலாம்

ஆக உக்ரனை பிடிக்க போய் உள்ளதையும் விட்டுவிட்டு திரும்பும் ரஷ்ய ராணுவம் எனும் ஆருடங்கள் வர தொடங்கியிருக்கின்றன, பார்க்கலாம்