குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 17
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணி னனிதாழ்ப – தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு.
ஆக்கம் பெரியார் சிறியார் இடைபட்ட மீச்செலவு காணினன் இனி தாழ்ப தூக்கின் மெலியது மேன்மேல் எழ செல்ல செல்ல வலிதன்றே தாழும் துலைக்கு”
கல்விசெல்வம் உடையவர் பொருட்செல்வம் உடையவர் முன் தாழ்ந்து நிற்பது போல் தோன்றலாம், தராசில் எந்த தட்டு எடை அதிகமானதோ அது தாழும் எது எடை குறைந்ததோ அது மேல் எழும்
தராசு முள் எடை அதிகமான பக்கமே சரியும்
அவ்வாறே அதிக மதிப்பு மிக்க கல்வி செல்வம் கொண்டோர் பொருட்செல்வம் கொண்டோரிடம் தாழ்ந்துதான் நிற்பர்,இது அவர்களின் மதிப்பு அதிகமானதைத்தான் சொல்லும்
தராசின் உவமை கொண்டு கல்விசெல்வம் பொருட்செல்வத்தை விட மேலானது என்கின்றார் குமரகுருபரர்