ஆச்சார கோவை :07

“எச்சில் பலவும் உள மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயில்
விழைச்சு இவை எச்சில் இந் நான்கு”

எச்சில் என்பவை பல வகை உண்டு என்றாலும் அதில் முக்கியானவை நான்கு

மலம், சிறுநீர் ஆகிய உடல் இயக்கத்தின் கழிவுகள், ஆணும் பெண்ணும் இணைவதால் வரும் கழிவுகள், வாயில் ஊறும் நீர் ஆகிய இந்த நான்கும் எச்சிலின் முக்கிய எச்சிலாகும்

இந்த நான்கு எச்சில்களால் அசுத்தமானால் உடனே சுத்தபடுத்தவேண்டும் என்கின்றது ஆச்சார கோவை, இந்த எச்சில்களில் எப்பொழுதும் கவனமாக இருத்தல் வேண்டும்

இந்துக்களின் ஆச்சாரம் பெரும்பாலும் சுத்தமும் சுகாதாரமும் கொண்டது, நோய் தடுப்பு மற்றும் நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை போதிப்பது

இன்று விஞ்ஞான மருத்துவம், நோய்தடுப்பு என‌ சொல்வதை என்றோ ஆச்சாரம் என சொன்னமதம் இந்துமதம்

அவ்வகையில் இந்த 4 எச்சில்களும் மிக கவனமாக கையாள வேண்டியவை, நோய் பரப்புதல் மற்றும் நோய் பரவாமல் தடுத்தலில் இந்த கவனம் கூடுதல் பலனை கொடுக்கும்