குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 18

“விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே – புலப்பகையை
வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்”

அதாவது விலக்கியவை ஓம்பி வித்தித்தனவே செய்யும் நல்லதையார் நல்வினையும் தீதே புலபகையை வென்றன நல்லொழுக்கி இன்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொள்ளின்” என பிரிந்து பொருள் தரும்

விலக்க வேண்டியவை என அறநூல்கள் விலக்கி, செய்ய வேண்டியவை என வலியுறுத்தும் விஷயங்களை செய்து வரும் நல்லவர்கள் செயலும் அவர்கள் தங்களை தாங்கள் “நல்லவர்கள், அறநெறி வழி நிற்பவர்கள்” என பெருமையும் கர்வபடும்பொழுது தீயதாகும் அறவழி அல்லா அறம்கெட்ட செயலாகும்

ஒருவன் நல்வழியின் பயிற்சியில் பயிற்சி பெற்று நல்லவனாக வாழும்பொழுதும் தான் நல்லவன் அறவழியில் நிற்பவன் என கர்வம் வந்தால் அவன் அறவழி ஒழிந்து அறம்கெட்டவனாகின்றான், எல்லா நல்வழி நற்குணங்களையும் கர்வம் அழித்துவிடும் , கர்வம் கொள்ளுதல் எல்லா அறவழியினையும் அழித்துவிடும் என்பது பாடலின் பொருள்