ஆச்சார கோவை : 08

“நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே – எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார்”

நல்ல அறிவு உடையவர்கள் மலம், சிறுநீர், விந்து மற்றும் சுக்கிலம், உமிழ்நீர் ஆகிய நான்கு எச்சில்களையும் சுத்தம் செய்யாமல் எதையும் படிக்க மாட்டார், வார்த்தையால் பேசமாட்டார், தூங்கவும் உண்ணவும் மாட்டார்கள் என்பது பொருள்

அசுத்தமான நிலையில், எச்சில்பட்ட நிலையில் எந்த செயலையும் செய்ய கூடாது என்பது ஆச்சாரம்

அசுத்ததோடு ஓதுதல் எனும் கற்பித்தலை செய்தாலோ, பேசினாலோ, ஏன் படுக்கையில் படுத்தாலோ அவ்வழி அசுத்த எச்சிலில் உள்ள கிருமிகள் இன்னொருவருக்கு பரவும் ஆபத்து இருப்பதால் இது சுகாராத்தை முன்னிட்டும் வலியுறுத்தபட்டது