ஆச்சார கோவை : 10

ஆச்சார கோவை : 10

“தேவர் வழிபாடு தீக் கனா வாலாமை
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், – ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக நீர்”

தெய்வ வழிபாடுக்கு முன், நெருப்பு ஏற்றும் முன் , மகளிருக்கான சில வகை அசுத்தங்கள், வாய்வழி கோழை வடிவது அல்லது வாந்தி எடுத்தல், முடி வெட்டிய பின் , உண்ணும் முன்பு, உடலுறவு கொண்ட நேரம், சுடுகாடு மாமிச கடை போன்றவற்றில் பணியாற்றுவோரு தொடுதல் இருந்தால் அதன் பின், மலஜலம் கழித்தபின் கண்டிப்பாக நீராடி சுத்தம் செய்தல் வேண்டும்

இந்த 10 விஷயங்களிலும் மிக கவனமாக இருப்பது ஆச்சாரம் எனப்படும்

இதெல்லாம் பெரும்பாலும் சுகாதாரம் பேணும் வழிகள் அன்றி வேறல்ல, அசுத்தங்களில் கிருமிகள் உண்டு அவை நோய்பரப்பும், முடிவெட்டியபின் நுண்ணிய மயிர்துளிகள் உடலுக்குள் செல்லும் ஆபத்து உண்டு , சுடுகாட்டிலும் செத்த மிருகங்களை வெட்டி எடுப்போர் மேலும் நுண்ணிய கிருமிகள் இருக்கும் இப்படி இந்த 10 வழிகளும் ஆச்சாரம் எனும் வகையில் நோய் தடுப்பையே வலியுத்துகின்றது