இந்து ஞானியரின் மனம் பிரபஞ்சத்தோடு இணைந்தது, அவர்கள் கண்கள் அந்த சக்தி இழையோடும் இடங்களை எளிதாக உணரும் சக்தி படைத்தவைஉயரபறக்கும் கழுகு தன் இரையினை சரியாக பார்ப்பது போல, காட்டுமலையில் எங்கோ இருக்கும் விலங்குகளுக்கு நீர் இருக்குமிடம் தெரிவது போல, எறும்ம்புக்கு சர்க்கரை இருக்குமிடம் தெரிவது போல‌ ஞானியருக்கு பிரபஞ்ச சக்திகள் குவிந்திருக்கும் இடம் அழாகாக தெரியும்இதனால்தான் ஞானியர் கேதர்நாத் முதல் இமயம் வரை சரியாக தேடி அமர்ந்தார்கள், ரமணர் யோகிராம் சுரத்குமார் போன்றோர் திருவண்ணாமலைக்கு சென்றார்கள்இந்திய ஞான மரபில் தென்னிந்திய ஞானியர் சங்கரர் போல் வடக்கே செல்வதும் வட இந்திய மகான்கள் அகத்தியர் முதல் பலர் தென்னகம் வருவதும் காலம் காலமாக நடக்கும் விஷயம்அவர்களின் தேடலை அறியும் பிரபஞ்சம் சரியான இடத்துக்கு அழைத்து செல்லும் அதில் முன் ஜென்ம கர்மாவும் உண்டுஅப்படித்தான் அந்த விவேகானந்தர் பாரதமெங்கும் அலைந்து திரிந்தார்இன்றும் மகான் என்றும் மாபெரும் ஞானி என்றும் கொண்டாடபடும் அந்த பெருமகன், இன்று லட்சோபலட்சம் மக்களால் வழிகாட்டி என்றும், கோடான கோடிமக்களால் தலைவன் என்றும் கொண்டாடபடும் அந்த ஞானமகன் வாழ்ந்த காலங்களில் அவன் ஒரு பராரி பரதேசிஅந்த காவி உடையும் காலணியும் தவிர் அவனுக்கு சொத்து என சல்லி காசு இல்லை, எங்கு சென்றாலும் பிச்சை பசி யாசகம் என்றுதான் சுற்றிகொண்டிருந்தான்அந்த 1892ம் ஆண்டு அவனுக்குள் மிகபெரிய தேடல் எழுந்தது, ஒரு சக்தி தன்னை எழுப்பி நடக்க சொல்வதை உணர்ந்து மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தான், நாடெல்லாம் எவ்வளவோ ரிஷிகள், மகான்கள், ஷேத்திரங்கள், கபாலிகள், மந்திரவாதிகள் என கடந்துவந்தான்கடைசியில் தமிழகம் அவனை அரவணைத்து கொண்டது, இங்கு அந்த துறவி ஒரு நிம்மதியினை உணர்ந்தான், சிக்காவோவில் நடக்கும் மாநாட்டுக்கு செல்லத்தான் அன்னை காளி தன்னை இங்கு அழைத்தாள் என்றும், ராமநாதபுர மன்னன் அவள் உத்தரவுபடித்தான் தன்னை அனுப்புகின்றார் என்றும் நிம்மதி கொண்டான்எத்தனையோ மன்னர்கள் இருந்தாலும் சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனுக்கு மட்டும் தெரிந்தது போல் விவேகானந்தர் அமெரிக்கா செல்லவேண்டிய அவசியம் ராமநாதபுரமன்னனுக்குத்தான் தெரிந்ததுஅமெரிக்கா செல்ல கப்பலுக்கு பணம் கிடைத்துவிட்டது ஆனால் பேசும் பொருள்?அந்த துறவிக்கு எல்லாம் தெரியும் ஆனால் கிடைத்திருக்கும் வாய்ப்பில் இந்துமதசிறப்பை எப்படி சொல்வது என்பதில் ஒரு லேசான குழப்பம் இருந்ததுஅதை நினைத்துகொண்டே திரிவேணி சங்கமம் நோக்கி சென்றான், அது அவன் மிகவும் எதிர்பார்த்த இடம்மலை உச்சிகளும் கடற்கரையும் சில இடங்களில் அபரிமிதமான பிரபஞ்ச சக்தியினை கொடுக்கும், அப்படிபட்ட இடங்களில்தான் இந்துக்கள் ஆலயம் அமைத்தார்கள், அப்படி அமைக்கபட்ட இடத்தில் ஒன்றுதான் கன்னியாகுமரி பகவதி ஆலயம்தென்னக இந்துக்களுகெல்லாம் காசியும் கேதர்நாத்தும் பெரும் கனவு, வடக்கத்திய இந்துக்களுக்கு ராமேஸ்வரமும் குமரியும் தனி விருப்பம்இந்த பாரதகண்டத்தின் ஆன்மீக இணைப்பு அப்படி இருந்தது, இதனால்தான் மொழியும் மன்னர்களும் நிரம்ப இருந்தாலும் ஒரே இந்து துணைகண்டமாக இந்த பூமி நின்றது, நிற்கின்றது, இன்னும் நிற்கும்அப்படிபட்ட இந்துவான அந்த துறவி பகவதி ஆலயத்தில் வணங்கிவிட்டு கடலை ஒட்டி அமைந்திருக்கும் பாறையினை நோக்குகின்றார், அந்த பாறை பற்றி அவர் அறிந்திருந்தார்அந்த பாறை அன்னை தேவி சிவனை நோக்கி தவமிருந்த பாறை,அந்த பாறையில் அன்னையின் பாதசுவடு இன்றும் உண்டுதிரிவேணி சங்கமத்தில் நீராட வருவோரெல்லாம் காலை மாலை அந்த பாறைக்கு சென்று அன்னையின் பாத சுவட்டையும் வணங்கி வருதல் இயல்பாய் இருந்ததுதிரிவேணி சங்கமத்தில் பாவம் தொலைக்க வந்த மக்கள் நடுவில் தேசத்தின் சாபம் தீரவழிதேடி நின்றார் அந்த பராசி காவி சன்னியாசிவிவேகானந்தர் அந்த “ஸ்ரீபாத மலை” எனும் குன்றுக்கு செல்ல உந்துதல் கொண்டார், அன்னை தவமிருந்த இடத்தில் அன்னை சிவனை நோக்கி தவமிருந்த இடத்தில் தானும் இருப்பேன் என நினைந்து கொண்டார்அந்த பாறையில் இருந்துதான் அன்னைக்கே சிவதரிசனம் கிடைத்தது அந்த புண்ணிய பாறையில் இருந்து தியானித்தால் சிவனருளால் தன்னால் சிக்காகோவில் பிரகாசிக்க முடியும் என நம்பினார்ஆனால் கடலை கடந்து செல்ல படக்கு காசு கொடுக்க வேண்டும், அவரிடம் ஏது காசு?, படகோட்டி மறுத்துவிட்டான்அந்த காவிதுறவி நீந்தி சென்று அந்த பாறையினை அடைந்தார், ஆம் நீந்தியே சென்றார், தாய்மடி தேடி ஓடும் குழந்தை போல சென்றார்அது 1892ம் ஆண்டு டிசம்பரின் 24ம் தேதிஅந்த பாறைக்கு சென்று அன்னையின் பாதத்தை வணங்கிய அந்த மகான் அந்த பாதத்தையே உற்றுபார்த்தார், அந்த பாதம் இருந்த வடிவம் படி அன்னை எத்திசையினை நோக்கி நின்றாள் என்பதை அவரால் உணரமுடிந்ததுஒரு காலில் அம்மை நின்று தவம் செய்த இடம் அது என்பதால் ஒரு பாதம்மட்டும் பதிந்திருந்ததுவிவேகானந்தர் அதை கண்டு வணங்கி, அத்திசை நோக்கி அமர்ந்து கொண்டார், மெல்ல மெல்ல தவத்தில் கரைந்தார்அன்று அந்த பாறையில் அன்னையின் காலடி சுவடு தவிர ஏதுமில்லை, ஒரு கூரை இல்லை, குடிக்க நீர் இல்லை எதுவுமில்லைகத்தும் அலை நடுவில் தகிக்கும் வெயிலிலும் கடும் குளிரிலும் தவம் செய்தார் அந்த ஞானி, இன்றும் வெறும்காலோடு சென்றால் தகித்துவிடும் அந்த பாறையில் அவர் எப்படி தவம் செய்தார் என்பது இப்பொழுது நினைத்தாலும் மனதை கதறவைக்கும் விஷயம்அந்த பாறையில்தான் அவருக்கு பெரும் ஞானம் கிடைத்தது, அந்த பாறையில்தான் அவர் இந்தியாவின் பெரும் ஆன்மீக எழுச்சியினை கனவாக உணர்ந்தார், இந்துமதத்தின் பெரும் பெரும் ஞான பொக்கிஷமெல்லாம் அவருக்குள் அங்கு பிரவாகமெடுத்ததுஇந்த தேசத்தினை பற்றிய கனவும் கவலையும் அங்குதான் அவருக்குள் ஞானமாக உருவாயின, இந்துமதம் என ஒன்று சரிந்தால் இத்தேசம் மீண்டெழமுடியா சிக்கலில் வீழும் என்பதையும் அதை சரிக்க நடக்கும் சதிகளையும் கண்டு அங்குதான் கதறி அழுதார்இந்துமதத்தை சூழ்ந்த இருளை விலக்கினால் எளிதாக இத்தேசம் தன் பொற்காலத்தை மீட்கும் என அவர் கடுமையாக சிந்தித்தெல்லாம் அங்குதான்அந்த தியானத்தின் விளைவுதான் என்றும் நிற்கும் அதிசிறந்த சொற்பொழியினை அமெரிக்காவில் வழங்கினார்அந்த ஸ்ரீபாத மலை பின்னாளில் அவர் பெயரால் அறியபடும் என்ரோ அங்கு அவருக்கு மண்டபம் கட்டபடும் என்றோ அவர் அறிந்திருக்க நியாயமில்லை, அவர் அன்னையின் பாதத்தை வணங்கித்தான் தவமிருக்க சென்றார் தவமிருந்தார்அவரின் அமெரிக்க சொற்பொழிவுக்கு பின்பே அந்த பாறை பிரசித்தியாயிற்று, எனினும் வெள்ளையன் ஆட்சியில் அதை கண்டுகொள்வார் யாருமில்லைசுதந்திர இந்தியாவில் பக்தவச்சலம் தமிழக முதல்வராக இருந்தபொழுது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருந்தகையாளர் ராண்டே விவேகானந்தர் பாறை என அங்கு மண்டபம் கட்ட வந்தார்அப்பொழுதுதான் அது “சேவியர் பாறை”என பெரும் சர்ச்சை வெடித்து சிலுவை எல்லாம் வந்தது, மோதல்கள் தீவிரமாயின‌ராணடே மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டார், “விவேகானந்தர் போன்றோரை ஏற்றுகொள்கின்றோம்” என சொன்ன கருணாநிதியின் முந்திய பேச்சுக்களை காட்டி திமுக ஆதரவை பெற்றார், அதை காட்டி பக்தவச்சலத்தை சம்மதிக்க வைத்தார்பெரும் சிக்கல்சுற்று சூழல் அமைச்சகம் என கம்யூனிஸ்டுகளிடம் இருந்து வந்தது, அதை மேற்குவங்க எம்பிக்கள் மூலம் மேற்குவங்க விவேகானந்தர் என திசைதிருப்பி அவர்களை அடக்கினார்இன்னும் ஏகபட்ட நகர்வுகள் மூலம் அமைதியாக அந்த பிரச்சினையினை முடித்து, அதில் எல்லோர் பங்கும் இருக்கவேண்டுமென வீடு வீடாக பிச்சையெல்லாம் எடுத்தார் ராணடேஅப்படித்தான் பெரும் கலவரமின்றி சேவியர் பாறையாக இருந்த பாறை விவேகானந்தர் பாறையாகி மண்டபமும் வந்ததுஇன்று தேசத்தின் எல்லா மக்களும் சென்று வணங்கும் விவேகானந்தரின் நினைவு பாறையாக அது வீற்றிருக்கின்றதுகன்னியாகுமரியில் அந்த படகு போக்குவரத்து அர்த்தமற்றது சுமார் 3 மணிநேரம் மக்களை காக்கவைக்கும் கொடுமை நடக்கின்றது, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து அந்த பாறைக்கு பாலம் கட்டுவது மிக எளிதான விஷயம்பாம்பன் போல, பம்பாய் போல பெரும் பாலம் வேண்டாம், சில நூறுமீட்டர்கள் கொண்ட பாலம் போதும்மத்திய அரசு அவசரமாக செய்யவேண்டியது அந்த பாலம் அமைக்கும் பணியினைத்தான், அது பயணிகளுக்கு நேரத்தை மிச்சபடுத்தும் பருவகால கடல் சீற்ற சிக்கலும் இல்லைஅதனை விரைந்து செய்வார்கள் என எதிர்பார்ப்போம், இந்நாளில் மத்திய அரசு சிந்திக்கவேண்டிய விஷயம் அதுதான்விவேகானந்தர் பெரும் ஞானி, நிச்சயம் அன்னை காளியின் தனிபெரும் புதல்வன், அவர் மட்டும் கன்னியாகுமரி வந்து தவமிருந்திராவிட்டால் அந்த பாறை அன்னையின்”ஸ்ரீபாத” மலையாக இருந்திருக்காது பிரிதொரு நாளில் கன்னிமேரி பாதிரி பிரான்ஸிஸ் சேவியருக்கு காட்சிகொடுத்த “சேவியர்” மலையாக மாறியிருக்கும்பாரத்தத்தின் மிகபெரிய பிரபஞ்ச சேத்திரமான அந்த மலை இன்றும் இந்து அடையாளமாக நீடிக்க சுவாமி செய்த தவம் அதுவும் கடும் வெயிலில் செய்த தவம் ஒரே காரணம்அந்த இடம் தியானத்திற்குரியது, அன்னை அதனை உலகுக்கு சொன்னாள் நானும் அதை நிரூபிக்கின்றேன் என செய்துகாட்டியவர் விவேகானந்தர்அந்த மலை ஒரு சுற்றுலா தலமாக இருப்பது சரியல்ல, குறைந்தபட்சம் விவேகானந்தர் மண்டபத்தையாவது முழு தியான மையமாக மாற்றி வைக்கலாம், இப்பொழுது அமைக்கபட்டிருக்கும் தியான மண்டபத்தை அப்படியே மேல் மண்டபத்துக்கு மாற்றி பரிபூரண அமைதியின் இடமாக மாற்றலாம்அங்கு அப்படி செய்யவேண்டிய அவசியமும் உண்டுஅந்த மண்டபத்தினுள் விவேகானந்தரையும் அவரின் ஞான கம்பீர போதனையினை படித்தோர் கால்வைக்கும் பொழ்தெல்லாம் மனம் சிலாகிக்கும்அவரின் நாட்டுபற்றும் ஆழ்ந்த ஞானமும் இந்துமதம் பால் அவர் சொன்ன அற்புதமான விளக்கங்களும் நெஞ்சில் அலைமோதும்அந்த மாபெரும் ஞானகடல் தன்னை ஒடுக்கி அடக்கி அமர்ந்த இடம் இதுதான், வெறும் பாறையில் அமர்ந்த இடம் இதுதான் என உணரும் பொழுது நாமும் அதில் அமரவேண்டும் என மனம் துடிக்கும்ஆனால் அமரகூடாது என்பார்கள், அதை மீறி முழங்காலிட்டால் சுற்றுபயணிகளின் போட்டோ அட்டகாசமும் அலறலும் இன்னும் ஆர்பரிப்பும் அந்த மண்டபத்தின் அமைதியினை குலைக்கின்றன‌அங்கு தியானத்துக்கும் அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தியானம் செய்வோர் மட்டும் அனுமதிக்கபடுமாறு விதிகளை வகுத்து அந்த ஷேத்திரத்தின் முக்கியத்துவத்தை காத்தல் வேண்டும்விவேகானந்தர் ஞான விளக்கு, அந்த விளக்கு எல்லா வீட்டிலும் எரிய வேண்டும், இந்தியாவின் பலம் அதன் ஆன்மீகம், அந்த ஆன்மீகம் வளர வளர இந்தியா எழுந்து ஒளிவீசும், அப்படித்தான் எழுந்து கொண்டிருக்கின்றது”இந்தியா எனும் கழுகு உயரபறக்க ஆண்கள் பெண்கள் எனும் இரு சிறகு அவசியம்” என்ற வரிதான் அவரின் சீடரான நிவேதிதா மூலம் தமிழக பாரதியாரையும் தொட்டதுபாரதியின் சிந்தனைக்கும் பெண் விடுதலைக்கும் விவேகானந்தரும் முக்கிய காரணம்ஒருவகையில் பாரதிக்கு விவேகானந்தரேதான் குரு, விவேகானந்தரின் சாயல் பல உடை நடை பாவனை முழக்கம் தேசபற்று அஞ்சாமை என பாரதிக்கு அப்படியே வரும் தலைப்பாகை உள்பட‌பாரதியும் விவேகானந்தர் போல 39 வருடம் மட்டுமே வாழ்ந்தான்பல இடங்களில் பாரதி விவேகானந்தரை பற்றி எவ்வளவோ எழுதினார், அவர் எழுதிய கட்டுரையின் சிறுபகுதி இதோ”சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது.கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானன்டரே ஆவார் என்று தோன்றுகிறது.‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பாரசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டால்.அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன வெற்றிக் கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்து. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொர்போழோவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வேர்ரிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு, போஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள்.‘இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?’ என்று வகுத்துக் கூறுவதற்கு – இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனுமில்லை.சுக்கிர கிரகத்திற்கும். புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு – தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?சுயலாம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக்கும் தேரையாகிய நான் – ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்கலாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர்களின் உயர்வு தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியம்?ஆனால் அந்தப் பாரையிளிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா?அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில் விவேகானன்டச் சுடரின் பெருமையைச் அடிக்கடி பேசுகின்றேன்உண்மையான புருஷத்தன்மையும், வீரநேரியும் மனித வடிவம் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், ‘விரேஸ்வரன்’ – ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?‘இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று மில்லை’ என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், ‘இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது ‘ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கைச் சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது.பாரததிருநாடு அந்த ஞானமகனின் வழியில் நடந்தால் மட்டுமே உய்வும் ஒளியும் பெறும், அவர் காட்டிய வழியே ஹிந்துதர்மமும் இந்த நாடும் செழித்து நிற்கும் மார்க்கம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன், அவரின் அஞ்சாமையும் தைரியமும் ஞானமும்தான் எம்மை வழிநடத்துகின்றது”தமிழக பாரதியின் இந்த வரிகள் அந்த விவேகானந்தரையும் அவர் கடும் தவமிருந்த பாறையினையும் நினைக்கும்பொழுதெல்லாம் காதோரம் ஒலிக்கும்கன்னியாகுமரியில் வீசும் கடல் அலைபோல ஓயாமல் ஒலித்துகொண்டே இருக்கும்

15Babu G, Shunmuga Selvan and 13 others1 shareLikeCommentShare