குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 25

“வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குகப்பெய்தார் – மாத்தகைய
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு”

அரசனின் அரண்மனையில் பலமான யானைகள் வெளியே புழக்கடையில் தொழுவத்தில் சங்கிலியால் கட்டபட்டிருக்கும், ஆனால் பூனை அரசனின் அந்தபுரத்தின் அழகிய மஞ்சத்தில் அரசனை அடுத்து சுகமாக படுத்திருக்கும்

ஆனால் நாட்டை காப்பது எதுவென்றால் அந்த யானைதானே தவிர பூனை அல்ல‌

அப்படி மேன்மக்கள் எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாட்டை காப்பார்கள், ஆனால் கோழைகளும் தாழ்ந்தோரும் அரசனை அண்டிவாழ்வர், நாட்டுக்கு ஆபத்து என்றால் ஒளிந்துகொள்வர், அவர்களால் நாட்டுக்கு ஏதும் பலனில்லை

அரசனை அண்டிவாழ்ந்தாலும் கீழ்மக்களால் பலனில்லை , அரசனை விட்டு தொலைவில் வாழ்ந்தாலும் மேன்மக்கள் நாட்டை காப்பர் என்பது பொருள்