குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் 27
“கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினும் – தண்ணளியால்
மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கு மாணல் லவர்க்கு”
இப்பாடல் பொருள்தரும்படி இப்படி பிரியும்
“கண்ணில் சொல் செவியினோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின்பாலதே ஆயினும் தண்ணளியால்
மன்பதையோம் பாதர்க்கு என்னாஅம் வயப்படைமற்
என் பயக்குமாணால் அவர்க்கு”
கண் சொல் என்றால் இரக்கம் கண்ணோட்டம் என்பார்கள், மன்னனின் கண்கள் தன் மக்களை கருணையோடு நோக்கவேண்டும், அவன் செவிகள் மக்கள் வார்த்தைகளை கேட்க தயாராக இருக்க வேண்டும் அதுதான் இறைமாட்சி அதாவது மன்னனுக்கு பெருமையும் அழகுமாகும்
அரசனின் கடமை மக்களின் குறைபோக்கி காக்கும் புண்ணிய செயல் அன்றி வேறல்ல
தன் மக்களை தன் கொடையாலும் கருணையாலும் ஆதரிக்க தெரியாத மன்னனுக்கு பெரும் வலிமையான படை இருந்தாலும் அது பலனற்றது, அவனுக்கு பெருமையும் கவுரவமும் ஒருகாலமும் வாய்க்காது