குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 37

“கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா – வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு”

அதாவது இரக்கம் எனும் கருணையினை மொட்டாகவும், புன்னகை மிக்க முகத்தை மலராகவும், இனிய வார்த்தைகளை மணமாகவும், உண்மையினை காயாகவும் கொண்டு கொடை எனும் கனிகளை சலிக்காமல் தந்து கொண்டே இருப்பவரே மண்ணுலகில் கற்பக தரு என்பது பொருள்

கற்பக தரு என்றால் தேவலோகத்தில் உள்ள மரம் அது கேட்பதை எல்லாம் கொடுக்கும் என்பது எல்லோரும் அறிந்தது

மண்ணுலகிலும் கற்பக தரு உண்டு, சிரித்த முகத்துடன் கொடைகளை அளிக்கும் கருணை மிக்கவர்களே அந்த கற்பக மரம் என அவர்களை தேவலோக கொடைகளுக்கு ஈடாக சொல்கின்றார் குமரகுருபரர்