இந்துமதம் எனும் ஞானமார்க்கத்தை குழப்பவும், அது வலுபெறும்பொழுதெல்லாம் வீழ்த்தவும் எதிரிகள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்துமதம் பிராமண ஆதிக்க மதம், மற்றபடி இந்துமதம் என ஒன்று இல்லவே இல்லை அது எல்லாம் கதை என்பதுஇதனை புத்தம் செய்தது, சமணம் செய்தது பின் இந்துமதம் வலுவாகி மீண்ட வேளைக்கு பின் இந்து அரசுகள் வீழ்ந்து அந்நிய ஆட்சி வந்தபொழுது போர்ச்சுகீசியர் செய்தனர், ஒருவனை மதம் மாற்றவேண்டுமெனில் அவனை வறுமையில் தள்ள வேண்டும் , சிக்கலில் சிக்கவைக்கவேண்டும், அவனின் மதமும் பெருமையும் நினைத்துபார்க்கா வகையில் அவனை அவமானபடுத்தி தன் பக்கம் சேர்க்கவேண்டும் என்பது வெள்ளையர் கணக்குஅந்நிய ஆட்சியினால் பாதிக்கபட்ட இந்துக்களை அதுவும் கடற்கரையோர இந்துக்களை உன் ஏழ்மைக்கு காரணம் அந்நிய ஆட்சி அல்ல உன் மதம், நீ மதம் மாறி எங்கள் மதத்துக்கு வந்தால் வாழலாம் என அவர்களை மூளைசலவை செய்து தங்கள் ஆட்சியினை நிறுவினார்கள் போர்ச்சுகீசியர்கள்தொடர்ந்து அவர்களுக்கு சவாலாக இருந்து இந்துமதம்அது பிச்சைகாரர்களை உருவாக்குவதில்லை , கேடுகெட்ட சமூகத்தினை உருவாக்கவில்லை, பெரும் நாகரீகமும் உன்னத வாழ்வும் கொண்ட இந்துமத்தை பிராமண சமூகம் தாங்கி நின்றதுபிராமணர்களை குறிவைத்தால் இந்துமதம் ஒழியும் என முதலில் சொன்னது போர்ச்சுகீசியர், அதனை தமிழகத்தில் பலர் செய்து கடைசியில் கையில் எடுத்தது திராவிட கோஷ்டிகள்சிவனேச செல்வர்களும் ஏராளமான சிவாலயங்களும் நிரம்பிய தமிழகத்தில் அதனை இன்னொருவிதமாக குழப்பினார்கள்தமிழன் வழிபட்ட சிவன் வேறு, பிராமண வழிபாடு வேறு பிராமணன் நம்மை அடிமைபடுத்திவிட்டான் என குழப்பியடிப்பார்கள்இந்த சூழ்ச்சிக்கு இந்துக்கள் பலரே பலியாகி செல்வது வேதனை, அப்படி ஒரு கூட்டம் இப்பொழுது சமீபகாலமாக பெருகி, மிஷனரிகளின் கைகூலியான திராவிடத்தாரின் கைகூலிகளாகி பிராமண வெறுப்பும் இந்து குழப்பமும் செய்வதாக அறிகின்றோம்அதனை சகிக்க முடியா சவம், நெல்லை மக்கர் என பலர் செய்வதாகவும், செங்கல்லுக்கரசி போன்ற குழப்பவாதிகள் திராவிட மிஷனரி கைகூலிகளாக இருந்து இதனை பரப்பி வருவதாகவும் அறிகின்றோம்இந்துமக்கள் ஒரு உண்மையினை புரிந்து கொள்ள வேண்டும்இவர்கள் சில இடங்களில் திருமூலரின் “உள்ளமே பெரும் கோவில்” என்பது முதல் “அகம் பிரம்மாஸ்வி” வரை பெரிய தத்துவங்களை சொல்லி குழப்புவார்கள்”அகம் பிரம்மாஸ்மி” என சொல்வது எளிது “உள்ளமே கோவில் ” என சொல்வதும் எளிது , ஆனால் அதையெல்லாம் பின்பற்றி நிலைப்பது கடினம், அந்த அதி உன்னத நிலை கோடியில் ஒருவருக்கு வாய்க்கும்அது திருமூலர், ஒளவை, ரமணர் என கோடியில் ஒருவராலே சாத்தியம்அதை நம்பிகொண்டு தமிழன் வழி சித்தன் வழி என கிளம்பினால் கோவில் செல்லும் அவசியம் இராது, வழிபாடு நடக்காது, சரி சென்றவனாவது அகம் பிரம்மாஸ்மி என உண்மையினை உணர்வானா என்றால் அதுவுமில்லைஇப்படி குழம்பி நிற்கும் சமூகத்தை மதமாற்ற சக்திகள் எளிதில் கவ்வும்ஆம், இந்துமத அடையாளத்தை பூசிகொண்டு இந்துமத மக்களை எதிரிகளிடம் பலிகொடுக்கும் வியாபாரத்தை இந்த துவேஷிகள் செய்கின்றார்கள் இந்துக்கள் இவர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்ஆனானபட்ட திருமூலரே சிவாலயத்தில்தான் அமர்ந்திருந்தார் என்பதும் ஒளவை விநாயக பெருமானின் பெரும் பக்தை என்பதும் எல்லோரும் அறியவேண்டும்உண்மையில் பிராமணர்கள் தமிழர்களை குழப்பினார்களா, வேதங்கள் எல்லாம் பொய்யா என்றால் அல்ல விஷயம் அதனை கொஞ்சம் விளக்கலாம்இந்துமதம் நுட்பமானது அது ஓசையால் இயங்கும் பிரபஞ்சத்துன் நுணுக்கத்தைபடித்தது , அந்த ஓசைகளை வேதங்கள் என சொல்லி மானிடருக்கு சமஸ்கிருத ஸ்லோலகங்களாக கொடுத்ததுஅதை தொகுத்த வியாசரும் பிராமணர் அல்ல, அதை வழி வழி காத்த மகான்களும், அரசர்களும் கூட பிராமணார் அல்ல‌பிராமணருக்கு வேதம் கற்கவும் ஓதவும் வழிசெய்த இந்துமதம் அது அவர்கள் குல சொத்து என சொல்லவுமில்லை, கொடுக்கவுமில்லை அவர்களின் இயல்பறிந்து குணமறிந்து பல விதிகளை வகுத்ததுவேதங்கள் வலிமையானவை, வேதங்கள் உலகை இயக்குபவை , வேதங்கள் வழிவழியாக தொடரவேண்டியவை என்பதால் பிராமணர் தலைகணமோ கர்வமோ கொள்ளாத வகையில் பல சிரமங்களையும் கொடுத்ததுபிராமணனுக்கு சுயதொழில் கூடாது, பிராமணன் யாசகம் ஒன்றாலே வாழவேண்டும், அவனுக்கு சொந்த சொத்தோ சுகமோ இருக்க கூடாது, சுருக்கமாக சொன்னால் பிச்சை ஒன்றாலே அவன் வாழவேண்டும் எனும் விதியும் வகுத்ததுகற்றல் கற்பித்தல் அவர்கள் கடமை என்றது, ஆம் பிராமணன் எல்லா சாதிக்கும் கற்றும் கொடுக்க வேண்டும்தன் தொழில், தன் குடும்பம், தன் இனம், தன் செல்வாக்கு என ஒவ்வொருவரும் அல்லும் பகலும் போராடும் உலகில் கோவில் வேதம் யாகம் என அர்பணித்த பிராமணர்களை ஆதரிக்கும் பொறுப்பை அரசர்களே ஏற்றார்கள்பசுக்களும் , அந்தணர்களும் ஒன்று என்றார்கள். காரணம் இரண்டும் ஆதரவு தேவைபடுபவை, இரண்டுமே நீர் கரையில் வாழ்பவை, இரண்டும் இல்லாவிட்டால் உலகம் வாழமுடியாதுஅதே நேரம் அவர்களுக்கு சொந்தமாக வாழ காவலும் இல்லை வழியும் இல்லை தொழிலும் இல்லை என்பதால் அரவணைப்பு தேவைஅப்படிபட்ட பரிதாப நிலையில்தான் பிராமண இனத்தை வைத்திருந்தது முன் இந்து சமுதாயம், அதை மறுக்கமுடியாதுபிராமணர் அரசனுக்கு கட்டுபட்டவர்கள், நாட்டிற்கு யாகம் செய்தல், நல்ல நாள் குறித்த, போர் ஆபத்துக்களை அறிவித்தல், வான் கோள் அசைவில் நாள்குறித்து வெள்ளம் வறட்சி தவிர்த்தல் என பல சேவைகளைத்தான் செய்தார்கள், ஆளவில்லைஇந்துமதம் இருவகையான மொழிகளை தேசம் முழுக்க அனுமதித்ததுஒன்று சமஸ்கிருதம் அது இமயம் முதல் தமிழகம் வரை பொது பூஜை மொழியாக இருந்தது, பல மொழிகள் கொண்ட பாரத கண்டத்தில் இணைப்பு மொழியாகவும் ஒரு வங்க ஞானி சொன்ன விஷயம் தமிழகம் வரை எட்டும் தகவல் மொழியாகவும் இருந்ததுஅதன் சில சிறப்பு ஒலிகள் ஞானமொழியாகவும் அதனை அடையாளம் காட்டின, பிரபஞ்ச அதிர்வுகளை கொடக்கும் மொழியாக அது இருந்ததுஇதனால் ஆலயம் முதலான இடங்களில் சக்திமிக்க கருவறையில் நல்ல அதிர்வுகளை கொடுக்க பூஜைக்குரிய மொழிகளாக அதை பயன்படுத்தினார்கள், யாகம், கும்பாபிஷேகம் என நல்ல அதிர்வுகளை கொடுக்க பூஜை மொழியாக அது இருந்ததுஇன்னொன்று வழிபாட்டு மொழி அது அந்தந்த பகுதி மக்களின் மொழி, அவர்கள் தங்கள் விருப்பத்தில் தங்கள் மொழியில் எவ்வளவும் கடவுளை வேண்டி பாடினார்கள்தமிழில் பக்தி இலக்கியங்கள் எல்லாமே இவ்வகை நாயன்மார்களும் அடியார்களும் பாடியதும் இதுவேஆக சமஸ்கிருதமே தேசம் முழுக்க பூஜை மொழியாக இருந்தது, அதனை பிராமணர்கள் படித்தார்கள் என்றாலும் தகுதியுடையோர் படிக்க தடையே இல்லைஆனால் வெறும் ஆண்டிபண்டாரங்களாகவும் சன்னியாசிகளாவும் விளங்கிய அவர்களிடம் கால் காசு கூட தேறாத அவர்களிடம் கற்றுகொள்ள யாருமில்லை என்பதுதான் அன்றைய யதார்த்தம்தங்கள் குலதர்மபடி உறிஞ்சவிருத்தி, யாசகம் என பிராமண குலம் அதனை தொடர்ந்து வந்ததுஇந்த பூஜைக்கு சமஸ்கிருதம், வழிபாட்டுக்கு அவரவர்மொழி என்பது பாரதம் முழுக்க இருந்த நிலை, சித்தர் வழிபாடு சிவாச்சாரி பட்டாச்சாரி என்பதெல்லாம் அடுத்த வகைபெரும் உதாரணம் ராஜராஜசோழன்அந்த சோழன் பிராமணர்களை ஆதரித்தான் பூஜைக்கு சமஸ்கிருதமே அனுமதித்தான் இவ்வளவுக்கும் அவன் கருவூர் சித்தரின் சீடன்ஆம் கருவூர் சித்தர் காலத்திலே தில்லை அந்தணர் முதல் எல்லா அந்தணர்களும் சிறப்புற்று இருந்தனர் எனும்பொழுது இப்பொழுது குபீர் என சித்தர் வழி, தமிழன் வழி பிராமணன் அதை அழித்தான் என்பதெல்லாம் உச்சகட்ட காமெடிஇக்குழப்பம் இந்து அரசர்கள் இருந்தவரை இல்லை, மிக கடுமையாக அதை களைந்தார்கள்அதே நேரம் பிராமணர் ஏதும் ஆடினால் சிவனே இறங்கிவந்து அடக்கினார் “தில்லைவாழ் அந்தணருக்கு அடியேன்” என சொன்ன சிவன், சோமாசி மாற நாயனாரின் யாகத்தில் “சாதி பார்க்கும் அந்தணரெல்லாம் மத்தியான பறையர்” என சபிக்கவும் தயங்கவில்லைஅப்படி இந்துமதம் அதன் இயல்பிலே தன்னை சரிபடுத்திகொண்டே வந்ததுமானிட மனம் பல வகை மயக்கத்துக்கு ஆளாக கூடியது, அவனிடம் தொடக்கத்திலே தவம் மோட்சம் யோகம் “அகம் பிரம்மாஸ்மி” என்றால் புரியாதுசிறு குழந்தையினை வேடிக்கை காட்டி வளர்த்து கொண்டுவருவது போல வழிபாடு, கோவில், என ஆன்மீகம் வழிக்கு மெல்லத்தான் பழக்கமுடியும், அதைத்தான் கோவில் வழிபாடு என இந்துமதம் செய்ததுஅதில் மெல்ல மெல்ல மனம் ஆன்மீகத்தில் கரையும் என்பதை அது உணர்ந்ததுகோவில் வெறும் ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மட்டும் அல்ல எல்லாவகை மக்களும் பலன்பெற வருவார்கள் என்பதால் பிரபஞ்ச சக்திகளை பெற வேதங்கள் வழி யாகமும் இன்னும் பலவும் மன்னர்களால் நடத்தபட்டு ஆகம வழி பூஜைகள் நடத்தபட்டு ஆலயங்கள் சக்தியூட்டபட்டன‌அந்த சக்தியில்தான் தமிழகமும் இந்தியாவும் பெரும் செல்வத்தோடு திகழ்ந்தன‌பின்னாளில் ஆட்சி மாறிய குழப்பமும் பல குழப்பமும் இந்துமதத்தை வீழ்த்தின, இப்பொழுது தேசம் முழுக்க இந்து எழுச்சி ஏற்படும் நேரம் தமிழக இந்துக்களை குழப்ப திராவிட மிஷனரிகளின் கைகூலிகள் வழக்கமான பிராமண எதிர்ப்பு தமிழ் வழிபாடு என குதிக்கின்றன‌இது இந்து மக்களை திசை திருப்பும் செயல்அது உண்மை என்றால் இந்தியாவின் 32 மாகாணங்களிலும் 32 மொழிகளில் வழிபாடு நடக்கவேண்டும் அப்படி அல்லாமல் எல்லா இடத்திலும் பூஜைகுரிய மொழியில்தான் வழிபாடு நடக்கின்றதுஅவர்களெல்லாம் தவறு நாங்கள் மட்டும் சரி என குதிப்பது முழு கயவாளிதனம், வஞ்சகம்சிவவழி, திருமூலர் என்பதெல்லாம் அதி உச்ச ஞானிகளுக்கு சாத்தியம், சாமான்ய மக்களிடம் அதை சொன்னால் அவர்களால் அந்நிலையினை எட்டமுடியாது, எல்லோரும் அவ்வழிக்கு செல்லுமாரு குழப்பினால் ஆலயம் பலவீனமடையும்அதைத்தான் இந்த கள்ள தந்திரத்தைத்தான் இவர்கள் அரங்கேற்ற வந்திருக்கின்றார்கள்இன்று சமஸ்கிருத வழிபாடு வேண்டாம் என்பார்கள், மெல்ல பூஜை வேண்டாம் என்பார்கள், மெல்ல மெல்ல பண்டிகை வேண்டாம் என்பார்கள், எல்லாம் அநாவசியம் என்பார்கள், என்னென்னவோ சொல்லி குழப்பி அடித்து இந்துக்களை மொத்தமாய் நாசமாக்கி கலங்கடிப்பார்கள்கேட்டால் “அகம் பிரம்மாஸ்மி” என்பார்கள், இதை சொல்லும் ஒருவனாவது அந்நிலையினை எட்டியவனா என்றால் தலையினை குனிவார்கள், ஆம் தங்களால் அடையமுடியா ஒன்றை காட்டி மக்களை குழப்புவது அவர்களுக்கு கொடுக்கபட்ட திட்டம்இவர்களை புறந்தள்ளி ஆகம விதிகளையும் வழிபாடுகளையும் காக்க வேண்டியது இந்து மக்களின் கடமைஇந்த உலகில் வேதவழிபாடும், யாக சாலையும், மந்திரங்களும் தனி ஆச்சரியமும் பாரம்பரியமுமானவை, இந்துக்களின் தனிபெரும் அடையாளம் அவை, அதனை ஒவ்வொரு இந்துவும் காக்க வேண்டும்அதனை ஒருவன் உடைக்க முயலுகின்றான் என்றால் அவன் இந்துமத ஆன்மாவினை அழிக்க முயலுகின்றான் என பொருள்அதை புத்தன் செய்தான், சமணர் செய்தார்கள் கடைசியில் வீழ்ந்தார்கள் வேதம் தன்னை நிறுத்தி கொண்டதுதிருமூலரும் பெரும் ஞானிகளும் அகம் பிரம்மாஸ்மி என உணர்ந்த நிலையிலும் பிராமண துவேஷமோ, ஆகம வழிபாட்டுக்கு எதிரானவர்களோ அல்லாதவர்களாக இருந்தார்கள் அதை இந்துக்கள் உணர்தல் வேண்டும்ஆம் சித்தர்களோ ஞானியரோ கோவில்களையோ பிராமணர்களையோ வெறுத்தவர்கள் அல்ல, வேதத்தின் அவசியம் அவர்களுக்கு தெரிந்திருந்ததுஇதனை உணர்ந்து இந்துமக்கள் இந்த கள்ளநரிகளிடம் விழிப்பாக இருத்தல் வேண்டும்தமிழனுக்கும் யாக வழிபாட்டுக்கும் ஆகமவிதிக்கும் தொடர்பில்லை என்றால் இவ்வளவு பெரும் ஆலயமும் ஆகமவிதி பூஜையும் எப்படி வந்தது?ஆசியா முழுக்க ஆண்ட ராஜராஜனும் இன்னும் பெரும் மன்னர்களும் ஏன் வேதங்களுக்கு பணிந்தார்கள்? உண்மையிலே அவை பொய் என்றால் அம்மன்னர்கள் ஏன் ஏற்க போகின்றார்கள்?மாறாக ஏற்று அவ்வளவு பெரும் அடையாளம் தந்தார்களே ஏன்?தமிழன் முழு வேதவழி இந்துவாக இருந்தான், அதை பல இடங்களில் காணலாம், இதோ பாடல்கள்ஆம், தமிழர்களுக்கும்,வேதத்திற்கும் தொடர்பே இல்லை, இந்திய ஞானமரபுக்கும் தமிழனுக்கும் தொடர்பே கிடையாது என்பது திராவிட கோஷ்டிகளின் புலம்பல்உண்மையில் அவைகளுக்கு தமிழ் இலக்கியம் முழுக்க தெரியுமா என்றால் தெரியாது, அவர்களாக சில குறட்பாக்களைப் படித்து வள்ளுவன் இந்து இல்லை என்பது மீதி திருக்குறளை மறைப்பதுஅவர்களாக சில புறநானூற்று பாடல்களை சொல்வது மீதியினை மறைப்பது, அவர்களுக்கு தெரிந்த கவிஞன் பாரதிதாசன் எனும் புலவனும் அவனின் தமிழ்வெறி வரியும், மற்றபடி பாரதியும் தெரியாது சங்கப் புலவனும் தெரியாதுஅவ்வையார் தெரிந்தாலும் அவர் பாடிய முருகனையும் பிள்ளையாரையும் பார்த்து கண்ணை மூடுவார்கள், இளங்கோவினை பார்த்தாலும் அவன் சொன்ன இயக்கி, இந்திரவிழா எல்லாம் பார்த்து முகத்தைப் பொத்திக் கொள்வார்கள்மூவேந்தர் என்பார்கள் மூவேந்தரும் இந்துக்கள் இந்து ஆலயம் கட்டினார்கள் என்பதை மறைப்பார்கள், பல்லவன் கலை என்பார்கள் அக்கலையில் கோவிலும் இந்துமத சிற்பங்களும் எழும்பின என்பதை சொல்லமாட்டார்கள், அவ்வளவு திருட்டுத்தனம்.இந்த திமுகவின் பிக்பிரதரும், முன்னாள் ஆர்மி ஜெனரலுமான அண்ணா எவ்வளவு பெரும் பொய்களைச் சொல்லியிருக்கின்றார் என்பதைப் பாருங்கள்தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார்இந்தப் பதிற்றுப்பத்துப் பத்துப் பாடல் சொல்வதைப் பாருங்கள், சேரன் பார்ப்பனரைக் கேட்டு யாகம் செய்த காட்சியினைச் சொல்லும்.பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74)பாண்டியருக்கும் இக்காட்சி உண்டுபாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் என்பது வரலாறுசிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது?””பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின்.”சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களைக் கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான்அதை ஒட்டிச் சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்அதியமான் வாழ்வு பற்றி புற நானூறு இப்படி சொல்கின்றதுஅதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்.இதோ சங்க கால புலவன் முதுகுடுமி பெருவழுதியி எழுதிய பாடல்”நல் பனுவல், நால் வேதத்துஅருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறைநெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,யூபம் நட்ட வியன் களம் பல கொல்?”அதாவது “வேத‌ நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? “இதில் தூண்களின் எண்ணிக்கை அல்ல விஷயம், தமிழன் நெய்யிட்டு யாகம் செய்திருக்கின்றான் என்பதுதான் கவனிக்கத் தக்கதுஅடுத்தபாடல்”எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்”இது கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி கருங்குழல் ஆதனார் பாடிய பாடல், பொருள் என்னவென்றால் “வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தனே”ஆக கரிகாலன் வேள்வி செய்திருக்கின்றான், வேள்வித் தூணை நட்டிருகின்றான்.அடுத்து ஒரு வாழ்வு தத்துவ பாடல்.”வாழச் செய்த நல்வினை அல்லதுஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்முத்தீப் புரையக் காண்தக இருந்தகொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,யான்அறி அளவையோ இதுவே”அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.ஆம் இங்கும் யாகம் பற்றி சொல்லபடுகின்றதுமூவேந்தர் கூடிய இடத்தில் ஒளவையார் சொன்ன பாடல் இது.”ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கைநான்மறை முதல்வர் சுற்ற மாகமன்ன ரேவல் செய்ய மன்னியவேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே ” – புறம் 26இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு,நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டுப் பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.இதோ கோவூர் கிழார் எனும் புலவனின் வரிகள்”மறவர் மலிந்த தன்கேள்வி மலிந்த வேள்வி தூணத்து” – புறம் 400அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.”கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்குஅருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை”- புறம் 362இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.இன்னும் எவ்வளவோ உண்டு, ஆம் தமிழரின் இலக்கியமெல்லாம் அவன் அந்தணர்களை ஆதரித்த கதைகளும் அவர்கள் மன்னனுக்காக வேள்வி செய்த வரிகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன‌அது குறளில் உண்டு, புற நானூற்றில் உண்டு இன்னும் பல இடங்களில் உண்டு, அதை ஆதாரத்துடன் சொல்ல முடியும்இதனால் திராவிட மிஷனரி கைகூலிகளை புறம் தள்ளுங்கள், நெல்லை மக்கர் அதை சொன்னான் செத்த சவம் இதை சொன்னான் என்றால் புறந்தள்ளுங்கள், அதை மறுத்து சொல்ல ஆதாரம் வேண்டுமென்றால் எம்மிடம் வாருங்கள், நாம் தயாராக எப்பொழுதும் இருக்கின்றோம்