இந்த திமுகவினர் அடிக்கடி சொல்லும் விஷயம், சங்கரலிங்கம் என்றொரு தியாகி இருந்தார், தமிழ் உணர்வாளர் அவர் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார், காமராஜர் ஈவிரக்கம் இன்றி அவரை கொன்றார் என்பதாகும்உண்மையில் இது மகா மோசடி, இதுபற்றி இன்னொரு தகவல் உண்டு. அரு.சங்கர் எழுதிய “பெருந்தலைவர் காமராசர்” எனும் நூல் இப்படி சொல்கின்றதுசங்கரலிங்கம் இந்தி படித்தால்தான் தமிழன் அகில இந்திய அளவில் நன்னிலை அடைய முடியும் என்பதில் உறுதியாய் இருந்தார்ராஜாஜி மேல் அவருக்கு பற்று அதிகம். சங்கரலிங்கத்தின் மகள் திருமணமே அவரின் தலைமையில் 1931ல் நடந்திருக்கின்றதுஅப்படி ஒரு தேசாபிமானி சங்கரலிங்கம்1944ல் சங்கரலிங்கம் வாழ்வு தடம்மாறுகின்றது, மும்பையில் அவர் மகன் இறந்துவிடுகின்றான். அத்தோடு மனைவியோடும் மகளோடும் உறவை அறுக்கும் சங்கரலிங்கம் ஒரு மாதிரி மனமுடைந்து சந்நியாச கோலத்துக்கு வருகின்றார்.தன் பணம் ஐந்தாயிரத்தை பெண்கள் கல்விக்கு கொடுத்துவிட்டு தன் சொந்த ஊரான விருந்துநகருக்கு அன்மைய கிராமமான மண்மலைமேடு எனும் ஊருக்கு வருகின்றார்.அங்கு 1956ல் ஒரு தானியகடை திறக்கின்றார், அந்த கடை ஒரு நள்ளிரவில் கொள்ளையடிக்கபடுகின்றது, மனமுடைந்த சங்கரலிங்கம் பட்டிணி போராட்டத்தை தொடங்குகின்றார், அவர் சுய அறிவில் எழுதிய கோரிக்கைகள் நான்கு1) நாட்டை ஆள்வோர் ஆடம்பரமின்றி காமராஜர் போல் எளிய வாழ்வினை காந்தி வழியில் தொடர வேண்டும்2) அரசு ஊழியர் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும்3) தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க பட வேண்டும்4) தன் சொந்த கடையில் காணாமல் போன பொருளுக்காய் நீதி வேண்டும், இந்நாட்டுக்காய் தான் தொடர்ந்து உழைக்க அந்த நீதி வேண்டும்இவை நாலும்தான் அவரின் உண்மையான கோரிக்கைகள், இதில் தமிழ்நாடு எனும் பெயர் கோரிக்கையே இல்லை.அவரின் கோரிக்கையினை யாரும் லட்சியம் செய்யவில்லை.அந்நேரம் நாம் தமிழர் போல் சுற்றிகொண்டிருந்த அனாமயதேய கோஷ்டியான திராவிட புலிகள் அவரிடம் சென்று, இங்கே இருந்தால் உங்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் , நகருக்குள் வாருங்கள் என அழைத்து ஓலை பந்தல் போட்டு அவரை விருதுநகர் அம்மன் கோவில் பக்கம் அமர வைத்துவிட்டதுஅத்தோடு 4 கோரிக்கையினை வைத்து அவரை பந்தலுக்குள் போட்டதுஅவர் பந்தலுக்குள் கிடக்க, இவர்கள் 4 கோரிக்கைக்கும் மேல் அவர்களாக எழுதி கொண்டே போனார்கள்.சந்தண வீரப்பன் கோரிக்கை காட்டைவிட்டு வெளிவரும் பொழுது குட்டி போடுவது போல, ஜல்லிகட்டுக்கான‌ மெரீனா போராட்டத்தின் கடைசியில் பலவகையான “குபீர்” கோரிக்கைகள் வந்தது போல அங்கும் வந்ததுசங்கரலிங்கம் நினைவிழக்க, இங்கு கோரிக்கைகளின் எண்ணிக்கை கூடி, 70ம் கோரிக்கையாக வந்ததுதான் “சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு” என பெயர் சூட்டபட வேண்டும் இந்தி ஒழிக்கபட வேண்டும்” என்பதுஆம், 70 நாட்கள் போராட்டம் நடத்தினார் சங்கரலிங்கம், நாளுக்கொரு கோரிக்கையாக இவர்களே எழுதி கடைசியாக தமிழ்நாடு பெயர்மாற்றம் என எழுதிய அன்று செத்துவிட்டார் சங்கரலிங்கம்இல்லையென்றால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை 71ம் நாள் எழுதபட்டிருக்கும்ஆக சங்கரலிங்கனாரின் உண்மை கோரிக்கை என்ன? இந்த திராவிட கும்பல்கள் கிளப்பிவிட்ட அரசியல் என்ன என்பதை இனி நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.காமராஜர் ஏன் தயங்கினார் என்றால் சங்கரலிங்கம் ஒரு நாடார், போராட்டம் நடந்தது காமராஜரின் சொந்த ஊரில், இது போக கோரிக்கை எழுதியதெல்லாம் தேச விரோத கும்பல்இதில் காமராஜர் எப்படி தலையிட முடியும்? அதுவும் 70 கோரிக்கைகள்ஆக சங்கரலிங்கம் இந்தி வேண்டும் என சொன்னது மறைக்கபட்டது, அவரின் தேசியம் மறைக்கபட்டது.அவரின் வறுமை மறைக்கபட்டு, இவர்களாகவே எழுதிய 70 கோரிக்கையாக எழுந்த , சங்கரலிங்கம் கனவிலும் சொல்லாத “சென்னை மாகாணம் தமிழ்நாடு பெயர்மாற்றம்” என்பது ஊதிபெருக்கபட்டு , காமராஜர்மேல் பழி போடபட்டு , சங்கரலிங்கனார் கனவினை அண்ணா நிறைவேற்றினார் என இல்லா பொய்களோடு வரலாறுகளை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.வரலாற்றை திருத்துவதில் தங்களுக்கு ஏற்ப வளைப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம், வரலாற்று திரிபுக்கே ஒரு கட்சி நடத்தபடுகின்றது என்றால் அது திமுக ஒன்றுதான்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன் பெயரில் தமிழ்நாடு எனும் கோரிக்கை எழுப்பபட்டது என்பது அவருக்கு கடைசிவரை தெரியவே இல்லை என்பதுதான்.

166Pazhani Appan, RamRam and 164 others4 comments43 sharesLikeCommentShare