ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 09″ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாதுதாவாதோ ஞான ஒளி”இக்குறள் “ஆவா என்றோதி அருள் பெற்றார்க்கு அல்லாது ஆவாதோ ஞான ஒளி” என பிரிந்து பொருள் தரும்.அதாவது சிவனை மிக மகிழ்வோடு நாளும் துதித்து அருள்பெற்றால் பரம்பொருளின் ஞான சுடர் அவர் உள்ளத்தில் பிரகாசிக்கும் என்பது பொருள்தினமும் இறைவனை தேடி வணங்கி நிற்பவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியோடு அவனை தேடி தேடி வணங்குபவர்களுக்கு ஞான ஒளியினை இறைவன் வழங்குவான் என பொருள்