ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 10
“ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.
ஓவா என்றால் முக்காலமும் நிலைத்த, நீங்காத என பொருள் , தாவாத என்றால் குறையாத என பொருள்
நீங்காத அருளை சிவனிடம் இருந்து பெற்றால் எப்போதும் அகலாத ஒன்றித்த நீங்காத இன்பம் நிலைத்திருக்கும் என்பது குறளின் பொருள்
இந்த உலகில் எல்லா இன்பமும் நீங்க கூடியது மாற கூடியது, சிவன் அருளால் உண்டாகும் இன்பம் எக்காலமும் நிலைத்திருக்க கூடியது என்பது பொருள்