சதுரங்க வல்லபநாதர் ஆலய வரலாறு

ஒரு அரசனின் மகன் அரசனாவதற்கும் ஒரு முழு பக்தன் அரசனவாதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு, பக்தன் அரசனானால் இறைவன் பெருமைகளை கோவிலின் வரலாற்றை உலகெல்லாம் சொல்வான்

இதனாலே அக்காலத்தில் மூர்த்திநாயனார் போன்ற சிவனடியார்களை அரசராக்கிய காட்சியெல்லாம் உண்டு, கூர்ந்து பார்த்தால் ராஜராஜசோழன் வரலாற்றிலும் இது தெரியும்

நேற்று மோடி மாமல்லபுர சதுரங்க விளையாட்டு தொடக்க நிகழ்வில் தமிழகத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலை பற்றி குறிப்பிட்டு, சதுரங்கம் இந்துக்களின் விளையாட்டு, சிவபெருமானே ஆடிய பழம்பெரும் விளையாட்டு என உலகம் வியக்க சொன்னார்

இந்தியான் அடையாளம் தாஜ்மஹால் எனும் சமீபகால‌ கல்லறை என உலகம் நம்பவைக்கபட்டிருந்த காலத்தை உடைத்து இந்தியாவின் பழம் பெருமைகளை உலகுக்கு காட்டுகின்றார் மோடி

திராவிட அரசியலுக்கும் பாஜக‌ அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் எதுவென்றால் இதுதான், சிவன் கோவிலையும் திராவிட கட்டடகலை, தமிழர் கலை என திசைமாற்றி “இந்து” எனும் வார்த்தையினை மறைப்பது திராவிடம்

புதைந்துவிட்ட வைரத்தை எடுத்து பட்டைதீட்டி தமிழன் இந்துவாய் இருந்தான் என ஆதாரத்தோடு சொல்வது பாஜக‌

சரி, அந்த சதுரங்க வல்லபநாதர் ஆலய வரலாறு எதுவென்றால் இதுதான்

அவ்வாலயம் காவிரி கரையில் சோழநாட்டின் பூவனூரில் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, தேவாரம் பாடபட்ட 103ம் தலமாகும்

இத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பதிகத்தில் இத்தல இறைவனைத் திருநாவுக்கரசர் “ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே” என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

இந்த தலத்தின் வரலாறு சுவாரஸ்யமானது, பல திருவிளையாடல்களை ஆடும் சிவபெருமான், அந்த திருவிளையாடலில் பல தத்துவங்களை போதிக்க திருவுளம் கொண்ட எம்பெருமான் இந்த நாடகத்தையும் ஆடினார்

அதாவது எந்த போட்டியிலும் முடிவு பரம்பொருள் கையிலே, திறமை உள்ளவன் வெல்வதோ திறமை இல்லாதவன் வீழ்வதோ அல்ல விளையாட்டு, வெற்றியும் தோல்வியும் இறைவனால் முடிவு செய்யபட்டது என்பதை விளக்க அவர் திருவுளம் கொண்டார்

சொக்கனாகிய அவர் இப்படி ஆடிய ஆட்டமே சொக்கனின் ஆட்டமாகி சொக்காட்டம் என்றானது

அதாவது விளையாட்டின் முடிவு சொக்கன் தீர்மானிப்பது என்பதே தத்துவம்

அடிக்கடி பலரின் ஆணவத்தை அடக்கும் அவர் சதுரங்கத்திலும் அதனை போதிக்க முடிவு செய்தார், அப்பொழுது சதுரங்கம் அரசர்கள் விளையாடும் விளையாட்டாய் இருந்தது

நாம் முன்பே சொன்னபடி நால்வகை சேனை கொண்டதாய் இருந்தது, இந்தியருக்கே உரித்தான யானைபடை இருந்தது, பின்னாளில் வெள்ளயன் யானையினை கோட்டை என மாற்றினாலும் கோட்டை நகராது என்பதில் தெரிகின்றது அவனின் பொய்
அரங்கத்தில் ஆடும் சதுர் ஆட்டம் என்பதே சதுரங்கமாயிற்று, சதுர் என்றால் நான்கு என பொருள் , நான்கு பக்கங்களை கொண்ட ஆட்டம் அது

அப்படிபட்ட சதுரங்கம் மகாபாரத சகுனிபோல் பலரை கர்வம் கொள்ள வைத்தது, அந்த கர்வத்தை அடக்கத்தான் திருவுளம் கொண்டார் சிவன்

அப்பகுதியினை ஆண்ட வசுதேவன் என்பவனுக்கு குழந்தை இல்லை , அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் குழந்தை வரம் தருபவராக அறியபடுபவர் நெல்லையப்பர்

நெல் என்பதை அவர் காத்த நிகழ்வு வெறும் அரிசிக்காக அல்ல, நெல் என்றால் முளைத்து வருவது, வயலில் பயிராகி பலநூறு நெல்லாக பெருகுவது, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சந்ததிகளை பெருக்கும் மூல அடையாளம்

இதனால் குழந்தைவரம் வேண்டி நெல்லையப்பரிடம் வருவோர் எக்காலமும் உண்டு, வசுதேவனும் அப்படி நெல்லைக்கு வந்தான்

வந்தவன் தாமிரபரணியில் நீராடும்பொழுது ஒரு சங்கினை கையில் எடுத்தான் அது குழந்தையாக மாறியது அப்பொழுது அசரீரி கேட்டது

“மன்னா இக்குழந்தை பார்வதியின் சாயல், சாமுண்டீஸ்வரியே இவளை வளர்ப்புதாயாக வளர்க்க வேண்டும் உரிய நேரம் வரும்பொழுது இவள் சிவனை அடைவாள்” என்றது

மன்னனும் அதை ஏற்று திருவாரூர் திரும்பினான், சாமூண்டீஸ்வரி ஒரு தாதியாக வந்தும் சேர்ந்தாள்.

அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என பெயரிட்டான் மன்னன், ராஜேஸ்வரி எல்லா கலைகளையும் பயின்றாள் அதிலும் சதுரங்கத்தில் தன்னிகரற்று இருந்தாள், காரணம் அந்த தாதியின் பயிற்சி அப்படி இருந்தது

ஒரு கட்டத்தில் எல்லா அரசர்களையும் வெல்ல ஆரம்பித்தாள் ராஜேஸ்வரி அவளுக்கு கர்வம் கூடிற்று, திருமண வயதில் யார் தன்னை சதுரங்கத்தில் வெல்வாரோ அவரைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாய் இருந்தாள்

அவளின் கர்வத்தை கண்டு கலங்கிய மன்னன் சிவனிடமே முறையிட்டான்

சில நாட்களில் அடியார் கோலத்தில் ஒரு மனிதன் அங்கே வந்தான், அரண்மனை வாசலில் நின்ற அவன் இளவரசி தன்னோடு மோத தயாரா என சவால்விட்டான்

ஆண்டி பண்டாரம் தனக்கு சவால்விடுவதா என ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி அவன் சவாலை ஏற்றாள், அரசகுடும்ப விளையாட்டான சதுரங்கத்தை அந்த பாமரனொடு ஆடினாள்

நெற்றியில் நீரும் குடுமையும் ருத்திராட்டமும் அணிந்த அந்த பண்டாரம் எளிதில் வென்றான், அப்படியும் இன்னும் இரு வாய்ப்புக்களை கொடுத்தான்

கடைசியில் அந்த ஆண்டியே வென்றான், தலைகுனிந்து நின்றாள் இளவரசி

தோற்றவள் வென்றவனுக்கு சொந்தம், நான் ஆண்டி பரதேசி நீ என்னோடு வருவதுதான் முறை என அவளை கைபிடித்து அழைத்து சென்றான் அந்த ஆண்டி

நாட்டுக்கே ராணி என எங்கு கம்பீரமாக வந்தாளோ, எத்தனையோ சதுரங்க வீரர்களை அந்த தெருவில் அவள் கண்ணீரோடு நடக்கவிட்டாளோ, அந்த தெருவில் குனிந்த தலையோடு கண்களில் நீரோடு கர்வம் உடைந்து அவனை பின்சென்றாள் இளவரசி

பூவனூர் ஆலயத்துக்குள் அவளை அழைத்து சென்றான் ஆண்டி, அந்த சன்னதியில் அவளுக்கு தான் யாரென்ற உண்மை தெரிந்தது

கர்ப்பகிரகத்துக்குள் சென்ற ஆண்டி சிவனாய் மாறி புன்னகைக்க, அவள் ஓடி சென்று அங்கே நுழைய இருவரும் காயத்தை கரைத்து கயிலாயம் ஏகினர்

இதுதான் அந்த பூவனூர் சதுரங்க வல்லாபநாதர் கோவில் வரலாறு

போர் மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் திறமை மட்டும் வெல்லாது, அதற்கு இறை அனுக்கிரஹம் வேண்டும், அந்த அனுகிர்கத்தை அதிர்ஷ்டம் என்று பலர் சொன்னாலும், திறமை என நாத்திகன் சொன்னாலும் உண்மையில் எல்லாம் இறை அருளே

எல்லா போட்டியும் இறைவன் நடத்தும் நாடகமே, அங்கு வெற்றியில் மகிழவோ தோல்வியில் துவளவோ ஒன்றுமில்லை

இறைவனே ஆட்டத்தை நடத்துபவன், முடிவினை அவனே அறிந்திருக்க்கின்றான், அவனே வெற்றியாளனையும் தோல்வியாளையும் அந்த நாடகத்தில் நடிக்க வைக்கின்றான்

இதனால் அங்கு வெற்றி என்பது இருவருக்கும் அல்ல அது இறைவனுக்கே, மானிடர் வெறும் பகடை காய்கள் என்பதே அந்த சதுரங்க வல்லபநாதர் கோவில் சொல்லும் தத்துவம்

அந்த தத்துவத்தை சூசகமாக சொல்லி போட்டியினை தொடங்கி வைத்திருக்கின்றார் மோடி

பாரத பெருமை இந்துமதத்தில் இருக்கின்றது, அதன் பெருமை ஞான தத்துவத்தில் இருக்கின்றது, இந்துக்களின் புராணமும் ஆலய வரலாறும் ஒவ்வொரு தத்துவ போதனை கொண்டவை

அதை ஒரு திருநீறு பூசிய இந்துவாக சரியாக செய்கின்றார் மோடி

உண்மையில் திராவிட கோஷ்டிகளை நாம் குற்றம் சொல்லமாட்டோம், அவர்களுக்கு இந்துக்களின் ஞானமும் பெருமையும் தெரியா வகையில் யாரோ போதித்து மனதை மயக்கி அறியாமையில் சிக்க வைத்திருக்கின்றார்கள்

அந்த அறியாமையினை அகற்றும் வேலையினைத்தான் நேற்று மோடி செய்தார், இன்னும் அவர் நிரம்ப செய்வார், அவர் வழியில் பலர் செய்வார்கள் இந்துமதம் தன் ஞானபெருநிலையினை உலகுக்கு காட்டி உயர மின்னி துலங்குமென ஒவ்வொரு இந்துவும் நம்பிக்கை கொள்ளும் நேரமிது

“எங்கிருந்தோ வந்தான்
இந்துசாதி நான் என்றான்
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்..”