ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 10

“வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்”

இக்குறள் “வேண்டுவோர் வேண்டும் வகை தான் விரிந்தெங்கும் காண்டற்கு அரிதாம் சிவம்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது சித்தத்தில் சிவனை நினைந்து அவனையே எப்பொழுதும் சிவக்கும் சிவனடியார்கள் வேண்டினால் அவர்கள் வேண்டியபடி சிவ தரிசனம் கிடைக்கும், எங்கும் பரவியிருக்கும் சிவம் அவர்கள் விரும்பிய வடிவில் வந்து அருள் புரியும் என்பது பொருள்

காண்பதற்கு மிக அரிதான சிவம் எனும் பெரும் சக்தியானது, சிவனை எப்பொழுதும் நினைத்திருக்கும் அடியார்கள் நினைத்தால் வந்து வரமருளும் என்கின்றார் ஒளவையார்

சிவம் அவர்கள் மனதில் மட்டுமல்ல அவர்கள் விரும்பும் எவ்வவடிவிலும் வந்து நிற்கும் என்பது குறளின் சுருக்கம்

சிவனடியார்களான சித்தர்களுக்கு சிவனருளால் எல்லாம் கைகூடும் என்பது குறளின் பொருள்