ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது?

உலகின் எத்தனையோ யுத்தங்களை நடத்திய அமெரிக்கா தன் சொந்தநாட்டில் தன் மக்களை இழந்தது அந்த செப்டம்பர் தாக்குதலில்தான்

அதற்கு முன் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தன் பேர்ள்ல் ஹார்பரில் அந்நாடு தன் வீரர்களை இழந்தாலும் அது ஒரு தீவு பகுதி அதில் இறந்தோர் ராணுவத்தார்

ஆனால் முதன் முதலில் தன் தலைநகரிலே அந்நாடு தாக்கபட்டது அப்பொழுதுதான், உலகமே அரண்ட நேரம் அது

அதன் பின் அமெரிக்கா ஆப்கனில் படையெடுத்து அங்கிருந்த தாலிபன் ஆட்சியினை அகற்றினாலும் அந்த தாக்குதலை நடத்திய அல்கைய்தாவின் தலைவன் பின்லேடனும் அதன் துணைதலைவன் அய்மான் அல் ஜவஹரி எனும் எகிப்திய டாக்டரும் சிக்காமலே இருந்தார்கள்

அமெரிக்காவின் ஆப்கானிய படையெடுப்புக்கு பின் தாலிபன்களால் பெரும் தாக்குதல் எதையும் செய்யமுடியவில்லை ஐரோப்பாவில் சில தாக்குதல்களை செய்தாலும் அமெரிக்காவில் தொட்டுபார்க்க முடியவில்லை

எனினும் தன் வரலாற்றில் நீண்ட போரை ஆப்கனில்தான் அமெரிக்கா நடத்தியது, அதன் பிரமாண்ட கப்பல்கள்
அரபிகடலில் நின்றன, பாகிஸ்தானில் அமெரிக்க தளம் வலுவானது தாலிபான்கள் வீழவும் அல்கய்தா இன்னும் ஆடியது

ஆனால் பின்லேடன் அகப்படாமலே இருந்தான், ஆப்கனுக்குள் அவனை பல வருடமாக தேடிய அமெரிகக பின் அவன் பாகிஸ்தானில் அதுவும் பாகிஸ்தான் ராணுவமுகாம் அருகே பதுங்கியிருந்தபொழுது அதிரடி நடவடிக்கையில் கொன்று தூக்கி சென்றது

அதன் பின் அல்கய்தா இயக்கத்துக்கு ஜவஹரி தலைவரானார், எனினும் அதன் பின் எழுந்த ஐ.எஸ் இயக்கம் அதை தொடர்ந்த உலக நிலவரத்தால் அல் கய்தா பழைய வேகத்தில் இல்லை

எனினும் ஜவஹரியினை தொடர்ந்து தேடிவந்தது அமெரிக்கா, கடந்தவருடம் அமெரிக்கா ஆப்கனில் இருந்து வெளியேறும்பொழுது தாலிபன்களுக்கும் அவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருந்தது

அதன்படி அமெரிக்கா வான்வழி தாக்குதலை செய்ய கூடாது என்பது அதே நேரம் தாலிபன்களும் அமெரிக்க எதிரிகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பது

இந்நிலையில்தான் காபூலில் பெரும் மாளிகையில் வசித்துவந்த அல்மான் அல் ஜவஹரி நேற்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லபட்டிருக்கின்றார்

மிக துல்லியமான தாக்குதல் அது, அவ்வளவு துல்லியமாக அடித்திருக்கின்றார்கள்

தாலிபன்கள் அமெரிக்கா ஒப்பந்த்தை மீறிவிட்டதாக சாடும் அதே வேளை அமெரிக்காவும் அவர்கள் அமெரிக்க எதிரிகளுக்கு இடம் கொடுத்தார்கள் என பதில்வாதம் வைக்கின்றது

எப்படியோ தங்கள்மேல் தாக்கியவர்கள் எவ்வளவு காலமானாலும் எந்த நாட்டில் இருந்தாலும் தப்பமுடியாது என உலகுக்கு காட்டிவிட்டது அமெரிக்கா

அமெரிக்கா தாக்கபட்டபொழுது அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னது “அமெரிக்க நீதி என்றால் என்ன என்பதை இனி உலகம் அறிந்துகொள்ளும்”

அதை செய்துவிட்டார்கள்

ஆனால் இதே அல்கய்தா பின்லேடன் , ஜவஹரி, முல்லா ஓமர் என யார் வளர்த்துவிட்டார் என்றால் இதே அமெரிக்காதான், அவர்கள் வளர்த்ததை அவர்களே அழிக்கின்றார்கள்

இங்கு ஒரு சந்தேகம் எழலாம், பின்லேடனை வீடுபுகுந்து சுட்டுகொன்று தூக்கியவர்கள் ஏன் ஜவஹரியினை

இப்பொழுது தாலிபான்களின் கோபம் கடுமையாக பாகிஸ்தான் மேல் திரும்பியிருக்கின்றது

காரணம் ஜவஹரியினை தாக்க வந்த விமானம் இதர நாடுகளான அதாவது ஆப்கனின் அண்டை நாடுகளான சீனா, ஈரான், துர்க்மினிஸ்தான், தஜகிஸ்தான் வழியாக வந்திருக்கமுடியாது

அது வந்த ஒரே வழி பாகிஸ்தான் வான்பதைதான்

ஆக பாகிஸ்தானே இதற்கு துணைபோனதாக கொதித்துகொண்டிருக்கின்றது தாலிபானும் அல்கய்தாவும், ஏற்கனவே பெரும் குழப்பத்தில் இருக்கும் பாகிஸ்தான் இப்பொழுது தலையில் கைவைத்து அமர்ந்திருக்கின்றது

அது இருக்கட்டும்

அமெரிக்கா தன்மேல் விழுந்த அடிக்கு 20 ஆண்டுகள் அழித்து 8ஆயிரம் கிமீ தாண்டி வந்து கொலைகாரனை கொல்கின்றது

ஆனால் இந்தியா தன்நாட்டு முன்னாள் பிரதமரை கொன்றவனையும் வெளியில் உலாவவிட்டிருக்கின்றது, அவனும் ஆடிபாடி கொண்டிருக்கின்றான்

அமெரிக்க நீதி அப்படி, இந்திய நீதி இப்படி