ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 02

“ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்”

இக்குறள் “ஒருவர்க்கு ஒருவனே ஆகும் உயிர்க்கெல்லாம் ஒருவனே பல் குணமுமாம்” என பிரிந்து பொருள் தரும்

இறைவன் எனும் பரம்பொருளான சிவனுக்கு ஈடு அவனே, அவன் ஒப்பற்றவன். அவன் தன்னில் ஒரு குணத்தோடு விளங்குகின்றான் அதே நேரம் ஒவ்வொரு உயிரிலும் ஒவ்வொரு குணத்தோடு விளங்குகின்றான் என்பது பொருள்

இவ்வுலகில் எல்லா உயிரும் சிவ வடிவம் சிவனின் தன்மையினை கொண்டிருக்கின்றது எனும் ஞான வரிகளை இங்கு போதிக்கின்றார் ஒளவையார்

இந்த அதிகாரம் தெரிந்து உணர்தல் என்பதை சொல்கின்றது, எல்லா உயிரும் சிவனில் இருந்து வந்ததால் அவை எல்லாமே சிவத்தை கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்து உணரவேண்டும் என்பது ஒளவை கூறும் போதனை