அல்மான் அல் ஜவஹரி கொல்லபட்ட விதம்
ஆப்கானிஸ்தானில் பின்லேடனின் வலதுகரமும் அல்கய்தாவின் இரண்டாம் தலைவருமான அல்மான் அல் ஜவஹரி கொல்லபட்ட விதம் இதுதான்
அவன் பின்லேடனை போல பாகிஸ்தானிலேதான் 20 ஆண்டுகளாக பதுங்கி இருந்தான் ஆனால் பின்லேடனை போல நெருக்கமாக பாகிஸ்தான் ராணுவமுகாம் அருகே தங்கவில்லை மாறாக பழங்குடிகள் மத்தியில் கடும் காடுகளும் மலைகளும் குகைகளும் நிரம்பிய இடத்தில் மறைந்திருக்கின்றான்
அமெரிக்கா ஆப்கனை காலிசெய்தபின் அவன் ஆப்கனுக்கு திரும்பியிருக்கின்றான், காரணம் பாகிஸ்தானை எக்காலமும் நம்பமுடியாது என சகலகலா வில்லனுக்கு தெரியும்
தாலிபன்களின் பலமான ஹக்கானி கோஷ்டி ஆப்கனி உள்துறையினை கைபற்றியபின் பெரும் காவலோடு காபூலின் பணக்கார பகுதியில் பெரும் பங்களா ஒன்றில் 8 மாதமாக தங்கியிருந்திருக்கின்றான் ஜவஹரி
அமெரிக்கா மிக வலுவான உளவு அமைப்பை ஆப்கனில் ஏற்படுத்திவிட்டுத்தான் வந்தது, 8 மாதமாக மிக நுணுக்கமாக ஜவஹிரியினை கண்காணித்து அது அந்த அல்கய்தா தலைவனே என உறுதிசெயதார்கள்
எல்லாம் உறுதியானபின் ஆளை தூக்க வேண்டும் அல்லவா? அங்குதான் எழுந்தது சிக்கல்
அதாவது அவன் எங்குமே செல்வதில்லை வீடு, மொட்டைமாடி என மட்டும் வந்துவிட்டு அதுவும் 3ம் மாடியின் பால்கனிக்கு வந்துவிட்டு சமத்தாக சென்று அடைந்துகொள்வான், அவனை யாரும் பார்க்கவும் முடியாது
(அவன் ஆப்கனில் இருப்பது தெரியாமல் வைக்க தாலிபன் இட்ட கட்டளை அது)
இப்படிபட்டவனை வெளியில் வைத்து கொல்லமுடியாது அதே நேரம் பெரும் ஏவுகனை வீசி அழிக்கவும் முடியாது, காரணம் அது ஏகபட்ட உயிர்களை காவுவாங்கும்
சிறியரக விஷவாயு குண்டு வீசினால் அது பெரும் ஆபத்து கொத்து கொத்தாக சாவார்கள் மக்கள், இது அமெரிக்க உளவாளிகளுக்கே அதிருப்தியினை கொடுக்கும் பின் ஒரு தகவலும் வராது
இதனால் அமெரிக்க தரப்பு மிக யோசித்தது, இந்த கொலை உத்தரவு அமெரிக்க அதிபரால் வழங்கபட வேண்டும், ஆனால் ஜோபிடன் நிரம்ப யோசித்தார்
யாருக்கும் ஆபத்தில்லாமல் அவனை கொல்வது எப்படி என அவர் கேட்க, ஆச்சரியமான தகவலை சொன்னது சி.ஐ.ஏ
அது எப்படிபட்ட ஆபத்தான அதே நேரம் ஆற்றலான அமைப்பு என்பது அப்பொழுதுதான் தெரிந்தது
தினமும் மாலை 6 சிறிது நேரம் அவன் பால்கனிக்கு வருகின்றான், 30 நிமிடம் வரை காற்றுவாங்குகின்றான், அந்நேரம் ஆளில்லா விமானம் மூலம் ஹெல்பயர் ஏவுகனையினை வீசி அழித்துவிடலாம் என ஆலோசனை சொன்னார்கள்
அவன் மட்டும்தான் இலக்கு எனும் கட்டளையுடன் கையெழுத்திட்டார் பிடன்
அவர் ஜூன் மாதமே உத்தரவிட்டார், அதை சி.ஐ.ஏ விரைந்து முடிக்க திட்டமிட்டது காரணம் இம்மாதிரி ஆசாமிகள் வீடுகளை மாற்றிகொண்டே இருப்பார்கள் கிடைத்த இடத்தில் முடிப்பதுதான் சரி
அதனால் விரைந்து திட்டமிட்டு ஆளில்லா விமானம் ஹெல்பயர் ஏவுகனை எல்லாம் தயார் செய்து ஆப்கனில் காலநிலைபடி மழை இல்லா பனி இல்லா நாளுக்காக காத்திருந்தார்கள்
அப்படி ஆகஸ்ட் 1ம் தேதி மாலை (அதே நேரம் அமெரிக்காவில் ஜூலை 31ம் தேதி) வழக்கம் போல காற்றுவாங்க வந்தான் ஜவஹரி
அந்நேரம் வானில் கழுகு போல் சுற்றிகொண்டிருந்த ஆளில்லா விமானம் ஹெல்பயர் ஏவுகனையினை வீசியது
இங்கு ஒரு விஷயம் கருத்தில் கொள்ளவேண்டும், இந்த ஆளில்லா விமானங்கள் ஆப்கனில் இயங்கினாலும் அதை இயக்குவது அமெரிக்காவில் இருந்து, மிக துல்லிய செயற்கைகோள் வழிகாட்டல் அதி நவீன வழிகாட்டல் மூலம் இயக்குவார்கள்
அந்த ஏவுகனை ஹெல்பயர் அதாவது நரக நெருப்பு
அது என்ன செய்யும் என்றால் வெடிபொருளையும் வெடிக்கவைக்கும் அதே நேரம் சுழலும் 6 தகடுகளை கொண்ட சக்கரத்தை முன்னால் மடித்து வைத்து
அந்த ஏவுகனையின் மூக்கு பகுதியில் ஒர் சென்சார் இருக்கும், அந்த சென்சாருக்கு யாரை குறிவைக்கும் கட்டளை கொடுக்கபடுமோ அந்த இலக்கை சரியாக சென்று தாக்கும், தாக்கும் முன் சக்கரம்விரியும் எதிரி அறுத்து தள்ளபடுவான்
முன்பு கட்டங்களை இலக்குவைத்து தாக்கும் டோமஹாக் ஏவுகனை அமெரிக்காவிடம் உண்டு, ஒரு கட்ட படத்தை அதில் ஸ்கேன் செய்து வைத்து குறிப்பிட்ட இடம் நோக்கி தட்டிவிட்டால் அந்த கட்டடத்தை மட்டும் நொறுக்கும்
இதனை இன்னும் மேம்படுத்தி தனிமனிதனை கொல்லும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது
இப்படி வானில் இருந்து ஹெல்பயர் ஏவிவிடபட்டதும் வெறும் 5 நிமிடத்தில் சரிந்தான் அல்மான் அல் ஜவஹரி
இந்த தாக்குதல் மூலம் அமெரிக்கா சொல்லும் விஷயம் பல
முதலாவது யாரையும் எங்கும் தங்களால் கொல்லமுடியும் என்பது, இரண்டாவது தாலிபன்களில் அமெரிக்க உளவாளிகள் நிறைய இருக்கின்றார்கள் என்பது அது அல்லாமல் இக்கொலை சாத்தியமில்லை
மூன்றாவது தொழிநுட்பத்தின் உச்சியில் இருக்கின்றோம் அமெரிக்காவில் இருந்துகொண்டே எங்கும் யாரையும் சரிக்கமுடியும் என உரக்க சொல்கின்றார்கள்
இவ்வளவும் சொன்ன அமெரிக்கா அந்த ஆளில்லா விமானம் எங்கிருந்து வந்தது என்பதை சொல்லவில்லை காரணம் அதை சொன்னால் சிக்கல், நிச்சயம் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கமுடியாது
மத்தியகிழக்கு தளம் அல்லது பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என்பது சில தியரி
எப்படியாயினும் தங்கள் எதிரிகள் எங்கிருந்தாலும் எத்தனை வருடமானாலும் விடமாட்டோம் என காட்டிவிட்டது அமெரிக்கா
இந்த தாக்குதல் மகாபாரத கண்ணனின் கையில் இருக்கும் சுதர்சன சக்கர தாக்குதல் போலவே இருப்பதை காணலாம், அதே போல் ஒரு ஆயுதத்தின் முதல்படியில் இருக்கின்றது அமெரிக்கா
இது அரேபியாவில் சில இடங்களில் பரிசோதிக்கபட்டது என்றாலும் மிக கடுமையாக அதே நேரம் சரியாக அறுத்து தள்ளியிருப்பது இப்பொழுதுதான்
இனி என்னாகும்?
அமெரிக்க எதிரிகளெல்லாம் கொஞ்சம் அச்சத்தில் இருப்பார்கள், புட்டீன் சும்மாவே வெளியே வருவதே இல்லை. வடகொரிய அதிபர் கிம் தன் வீட்டில் பால்கனி கட்டியவனை இப்பொழுது துப்பாக்கியுடன் விரட்டி கொண்டிருப்பார்


Good info on R9X 👍
Thanks Stanley.