ஐன்ஸ்டீன், எடிசன் வரிசையில் கருணாநிதி. ஒரு பதற வைக்கும் காமெடி

ஐன்ஸ்டீன், எடிசன் வரிசையில் கருணாநிதி. ஒரு பதற வைக்கும் காமெடி

இப்படி ஒரு காமெடியினை கிளப்பியிருப்பவர் கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அன்னார் கருணாநிதிக்கு செயலாளராக இருந்தார் அதுவும் ஐ.ஏ.எஸ் தகுதி கொண்டிருந்தார் என்பதுதான் ஆச்சரியம்

அவர் பேட்டியின்படி அவர் கண்ட சிறந்த IQ கொண்ட நபர் கருணாநிதிதானாம், உலகில் ஐன்ஸ்டீன் அம்பேத்கர் போன்றோரை சிறந்த IQ கொண்டவர்கள் என்பார்களாம் கருணாநிதி அப்படிபட்டவராம்

சரி ஐன்ஸ்டீனை ஆய்வு செய்த யார் கருணாநிதியின் IQ வினை ஆய்வு செய்தார் என்றால் பதில் இல்லை, காரணம் இது இவர் செய்த IQ ஆய்வு

ஐன்ஸ்டீனின் IQ கு பெரும் விஞ்ஞான தத்துவங்களை கொடுத்தது, அம்பேத்கரின் IQ கு நாட்டுக்கு சட்டதொகுப்பை கொடுத்தது

கருணாநிதியின் IQ கு முரசொலி, நெஞ்சுக்கு நீதி, இன்னும் டாஸ்மாக்கைத்தான் கொடுத்தது

அன்னாரின் காமெடி இன்னும் நீளுகின்றது

கருணாநிதி எம்ஜிஆர், ஜெயலலிதா என்றாலும் மரியாதையாக பேசுவாராம், ஆனால் கட்சிக்காரர்கள் அவர்களை மட்டமாக பேசும்பொழுது ஏன் கண்டிக்கமாட்டார் என அன்னார் சொல்லவே இல்லை

கருணாநிதியின் திட்டங்களில் உன்னதமானது சமத்துவமபுரமாம், அதனால் எத்தனை சாதிகளை கருணாநிதி ஒழித்தார் என்பது பற்றி மூச்சே இல்லை

உச்சகட்ட காமெடி என்பது கடைசியாக சொன்னதுதான்

கருணாநிதிக்கு பிடித்தமான துறை சமூக நலத்துறையாம், அந்த துறையினை மிக உன்னிப்பாக கவனிப்பாராம்

ஆனால் அண்ணா அமைச்சரவையில் கருணாநிதி அந்த இலாக்காவினை வாங்கவில்லை, அவர் ஆட்சியிலும் அதை தன் வசம் வைக்கவில்லை

பதினைந்து வருடம் மத்திய ஆட்சியில் இருந்தபொழுது அப்படி ஒரு துறை இருப்பதே அவருக்கு தெரியாது மாறாக ஐடிதுறை, சாலை கப்பல் போக்குவரத்து துறைக்கு மல்லுகட்டி பெற்றார் என்பது வரலாறு

இந்த உதவியாளரின் IQ லெவல் என்ன என முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அது இன்னும் சுவாரஸ்ய்மாக இருக்கலாம்