ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 10
“உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம்”
இக்குறள் “உலகத்தில் மன்னும் உயிர்க்கெல்லாம் ஈசன் அலகிறந்த வாதியேயாம்..” என்பது பொருள்
இந்த உலகில் வாழும் உயிர்களெல்லாம் தானாக வாழும் சக்தியற்றவை, அவையெல்லாம் சிவன் கொடுக்கும் சக்தியிலும் உயிர்களுக்கான கால அளவிலுமே (அலகு) வாழ்கின்றன என்பது பாடலில் பொருள்
இந்த உலகின் உயிர்களெல்லாம் அவை சொந்த சக்தியில் இயங்குபவை அல்ல அப்படி இயங்கவும் முடியாது, அவற்றுள் இருந்து செயலாற்றுவதெல்லாம் இயங்க வைப்பதெல்லாம் சிவனே
சிவனே எல்லா உயிர்களின் சக்தியும் இயக்கமும் உயிருமாய் இருக்கின்றான், எல்லா உயிரும் சிவமே என்பது பாடலின் பொருள்