வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக
1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ல் இந்திய சுதந்திரம் என முடிவு செய்யபட்டது, முன்னதாக 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் புதிதாக பிறந்தது, அதுவரை அப்படி ஒரு நாடு உலகில் இல்லை
ஆகஸ்டு 15ம் நாள் இந்தியாவின் அதிகாரமாற்றம் பிரிட்டிசார் கையில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டும், அப்பொழுது பிரிட்டனின் மவுண்ட்பேட்டன் சில ஆலோசனைகளை சொன்னான்
இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்றான்
இந்து ஆச்சாரபடி சுதந்திரம் வழங்க வேண்டும் என முடிவு செய்யபட்டது
ஆம் வெள்ளையன் நேருவுக்கு அந்த நல்ல விஷயத்தை சொன்னான் மவுண்ட்பேட்டன், இது இந்து தேசம் என்பது அவனின் சரியான நம்பிக்கை. ஆத்திரகரான நேரு விஷயத்தை ராஜாஜியிடம் விட்டுவிட்டார்.
ராஜாஜி தேர்ந்த ஞானி, குறைசொல்லமுடியா இந்து, அவர் இந்துமரபுபடி ராஜகுருதான் செங்கோலை அரசனிடம் கொடுத்து ஆட்சிமாற்றத்தை செய்வார், அந்த மரபுபடி நாமும் செய்யவேண்டும் என்றார்
அத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார், அப்பொழுது அந்த சன்னிதானத்தின் இளையபீடம் பண்டார சுவாமிகள் ஒரு செங்கோலுடன் டெல்லி சென்றார்
ஆம், அப்பொழுது இந்து இசை ஒலிக்க , மங்கல வாத்தியங்கள் முழங்க, கங்கை நீர் தெளிக்கபட, திருவாவடுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தார்கள்
அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதபட்டன
திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “
என்றும்.
திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”
கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்
“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
என ஓதப்பட்டன
ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி , ஆம் தமிழில் சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது
எவ்வளவு பெருமை இது?
எவ்வளவு அர்த்தமான வரி இது?
“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று
வெள்ளையனே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான்
ஆம், இப்படி இந்து முறைபடி தமிழ் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்
இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு
இப்படியெல்லாம் தமிழ் இந்து டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது
சுதந்திர நாளை ஒவ்வொரு தமிழக இந்தியனும் “அரசாள்வார் ஆணை நமதே” என சம்பந்தர் வார்த்தையால் வரவ்வேற்று கொண்டாட வேண்டும்
உரக்க சொல்வோம், உற்சாகமாக சொல்வோம், இந்நாளில் அந்த தேவார வார்த்தையினை வாய்நிறைய சொல்லி நாட்டின் திருநாளை வரவேற்போம்
“அரசாள்வார் ஆணை நமதே”
“அரசாள்வார் ஆணை நமதே”
“அரசாள்வார் ஆணை நமதே
அப்படி வாங்கபட்ட சுதந்திரம் இது, திருஞான சம்பந்தரின் வரிகள் ஓதி வாங்கபட்ட சுதந்திர நாட்டில் காசி கோவிலும் அயோத்தி கோவிலும் வந்தது, இந்துமதமும் தளைத்தது கொண்டிருக்கின்றது
சம்பந்த நாயனார் இந்துமதம் தழைக்க வந்த அவதாரம், அவரே சமணத்தை ஒழித்து இந்துமதத்தை நிறுத்தினார்
அப்படி அன்னிய ஆட்சியால் சீரழிந்த இந்தியாவில் சம்பந்த நாயனாரின் வரிகள் ஓதபட்டு சுதந்திரம் பெறபட்டதும், அதன்பின் தேசத்தில் இந்துமதம் மீட்டெடுக்கபடுவதும் மெய்சிலிர்க்கவைக்கும் விஷயம்
பாரதம் எனும் ஆன்மீக பூமி ஒன்றுக்கே சாத்தியமான விஷயம்
கூடவே கூன்பாண்டியனை நிமிர்த்தியபொழுது சம்பந்தர் சொன்ன அந்த வரிகளை சொல்லி பாடுவோம்
“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.”
ஆம் “வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக..”