யுவான் வாங்க் 5 Vs டேர்னியர்
அந்த சீன கப்பல் இன்று இலங்கை துறைமுகத்தில் “டொக்” செய்யபடும் அதாவது துறைமுகத்தில் நிலை கொள்ளும் என அறிவிப்புக்கள் வருகின்றன
அந்த “யுவான் வாங்க் 5” ஆகஸ்டு 11ம் தேதி இலங்கைக்கு வந்துவிட்டு ஆகஸ்டு 17 வரை நிற்க முதலில் சீனா ஏற்பாடு செய்திருந்தது ஆனால் இந்திய எதிர்ப்பு இலங்கையின் தயக்கம் இன்னும் பல விஷயம் காரணமாக அது பிற்போடபட்டது
எனினும் இன்று அந்த கப்பல் இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் தரித்து நிற்கும் என அறியபட்டிருக்கின்றது
இக்கப்பல் ராணுவ தாக்குதல் கப்பல் அல்ல இது சீன செயற்கைகோள் நகர்வுகளையும் அவற்றின் சிக்னல்களையும் கண்காணிக்கும் கப்பல் என்கின்றது சீனா, இதுபோல் அவர்களிடம் சுமார் 20 கப்பல் உண்டு
உலகை விரைவில் ஆண்டே தீரவேண்டும் என்ற பெரும் கனவினை கொண்டிருக்கும் சீனா அதற்கு வலுவான கப்பல்படை அவசியம் எனும் நோக்கில் இம்மாதிரி கப்பல்களை செய்து அதை தன் செயற்கைகோள்களுடன் தொடர்பு படுத்தி கடலில் இயக்குகின்றது
இக்கப்கல்களால் சுமார் 500 கிமீ வரை சிக்னல்க்ளை உளவுபார்க்கமுடியும் என்பதால் இக்கப்பல் இலங்கையில் நிற்பதை இந்தியா விரும்பவில்லை ஆனால் இலங்கைக்கும் வேறுவழியில்லை
இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர நாளை குழப்பவேண்டும் அல்லது அந்நேரம் ஏதாவது சிக்னல்களை கிரஹிக்க வேண்டும் என வந்த சீன கப்பலை தாமதித்து அக்கொண்டாட்டம் முடிந்ததும் உள்ளே அனுமதித்து இருபக்கமும் அடிவாங்கி நிற்கின்றது இலங்கை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இப்படி நெளிந்து தப்பியது
இந்தியா நிலமையினை அவதானித்தது, இந்தியாவிடமும் உளவுபார்க்கும் நீர்மூழ்கிகளும் விமானங்களும் உண்டு, இந்நேரம் இந்தியாவும் செய்ய வேண்டியதை செய்திருக்கும்
அதே நேரம் வெளிபடையாக ஒரு காரியத்தை இந்தியா செய்தது அதுதான் ஹாட் டாபிக்
இந்தியா மூன்று டேர்னியர் உளவு விமானங்கள் அல்லது கண்காணிப்பு விமானங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக அறிவித்து நேற்று முதல் விமானத்தை அனுப்பியிருக்கின்றது
இந்த விமானங்கள் சிக்னல்களை கிரஹிக்கும் ரகம், உளவு பார்ப்பதில் கில்லாடி ரகம்
அதை இலங்கைக்கு இந்நேரம் ஏன் கொடுத்தார்கள் என்றால் அங்கேதான் இருக்கின்றது இந்திய ராஜதந்திரம்
அதாவது இலங்கைக்கு “இதோ விமானம் எடுத்துகொண்டு பற” என சொல்லமுடியாது, மாறாக “நண்பனே எனக்கு இனிமையான சகோதரனே இந்த விமானம் உனக்கு என் அன்பளிப்பு
ஆனால் என் செல்லமே உனக்கு இந்த விமானம் புதிது அல்லவா? இதில் உள்ள கருவிகளை இயக்க தெரியாது அல்லவா? வா நான் உனக்கு உன் நாட்டிலே பயிற்சிஅளிக்கின்றேன்” என கூட வருவது
வந்து “வா பறப்போம், உனக்கு உளவு என்றால் என்ன என்று சொல்லிதருகின்றேன், அதோ நிற்கின்றதே சீன கப்பல் அதன் மேல் பறப்போம் வா, இந்த பட்டனை தட்டு சீன கப்பலின் அலைவரிசை தெரியும், இதை திருகு அவர்கள் யாரை உளவுபார்கின்றார்கள் என தெரியும்
ஒரு ரவுண்ட் பார்கலாமா
அட சண்டாளர்கள் உன்னையே உளவு பார்க்கின்றார்களடா, உன் ராணுவ நிலையம் உன் அலைவரிசை எல்லாம் அவர்களால் ஊடுருவ முடிகின்றதடா? அட பரிதாபமே
அன்பரே அவன் உன்னை தாண்டி எங்கள் நாட்டுக்குள்ளும் ஊடுருவுகின்றான் பார், இவனையெல்லாம் சமாளிக்க எங்களுக்கு தெரியாதா
சரி, இந்த பட்டனை தட்டு கப்பலின் ரகசியமெலலம் நமக்கும் வரும்” என பயிற்சி கொடுப்பது
ஆம் , சீன கப்பல் இந்தியாவினை உளவு பார்க்க இலங்கைக்கு வந்திருக்கும் நேரம் அங்கு தன் டேர்னியா விமானம் மூலம் புகுந்த இந்தியா சீன கப்பலுக்கு செக் வைக்கின்றது
பொதுவாக இப்பொழுதெல்லாம் உலகில் பெரும் ரகசிய போர் ஒன்று நடக்கின்றது, அது மின்னணு போர்முறை
அதாவது எலட்ரானிஸ் சிஸ்டம் மற்றும் சிக்னல்களில் இயங்கும் சிஸ்டங்களை சிலவகை தொழில்நுட்பத்தால் முடக்குவது
எதிரியின் விமானமோ கப்பலோ அல்லது ஏவுகனை சிஸ்டமோ இலக்கு என்றால் அதை ஏவுகனை வீசியோ இல்லை வெடிகுண்டு வீசியோ அழிப்பது பழமையாகிவிட்டது
இப்பொழுதெல்லாம் அதன் மின்னணு முறையில் குழப்பி அதன் கண்ணை கட்டிவைத்து அடிப்பது புதிய பாணி யுத்தம்
ஆம்,சிலவகை கருவிகளை இயக்கி எதிரி நாட்டின் மின்னணு சாதனங்களை குழப்பினால் அந்த பெரும் ஆயுதம் ஒரு பொம்மை போல் ஆகிவிடும் அதனால் பலன் இருக்காது
இதை கொண்டு தாக்கவரும் விமானங்களின் மின்னணு சாதனங்களை நிறுத்தினால் விமானம் இயங்காது, ஏவுகனை சிஸ்டங்களை குழப்பினால் அவை ஏவுகனைகளை வீசாது, கப்பல்களை குழப்பினால் அவை கண்கட்டியது போல் ஆகிவிடும்
இந்த போர்முறை உக்ரைனில் பரிசீலிக்கபடுகின்றது, ரஷ்யாவின் கைகள் கட்டபடவும் அதன் எஸ் 400 சிஸ்டம் பெரும் பலம் காட்டமுடியாமல் நிற்கவும் இது காரணம் என்கின்றார்கள்
சிரியாவில் ரஷ்ய தளங்கள் மேல் இஸ்ரேலும் இதை பரிசோதிக்கின்றது என்கின்றது சில தரவுகள்
உச்சமாக இரு தினங்களுக்கு முன் சீன தளபதிகள் சொன்னார்லள் “நான்சி விமானம் வந்ததை அறியமுடியாதபடி எங்கள் விமானம் மற்றும் கப்பல்படை தோல்வி அடைந்தது”
அதாவது சீனாவின் கண்களை கட்டிவிட்டு தைவானுக்கு சென்றிருக்கின்றது அமெரிக்க விமானம், அவர்களிடம் அப்படிபட்ட பொறிமுறை தொழில்நுட்பம் இருக்கின்றது
இந்த நுட்பம் இந்தியாவிடமும் உண்டு
சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருவது மட்டும்தான் நமக்கு தெரியும் ஆனால் லடாக் எல்லையில் 50 ஆயிரம் வீரர்களோடும் பெரும் உளவு கருவிகளோடும் நிற்கின்றது சீனா, அவர்களின் ஜே10 விமானங்கள் உயரபறந்து பல வேலைகளை செய்கின்றன
இந்தியாவும் பதிலுக்கு பல காரியங்களை செய்கின்றது
வங்க கடல் முழுக்க சீன நீர்மூழ்கிகள் ரகசியமாக வந்து உளவுபார்ப்பதும் அதை இந்திய நீர்மூழ்கியும் உளவுபார்க்கும் விமானங்களும் கண்டறிந்து விரட்டுவது அடிக்கடி நடக்கும் விஷயம்
இப்பொழுது உலகறிய சீன கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வரும்பொழுது இந்தியாவும் தன் உளவு விமானம் சகிதம் களத்தில் ராஜதந்திரமாக இறங்குகின்றது
அதாவது இலங்கை அரசின் அனுமதியுடன் தன் உளவு கப்பலை இலங்கைக்கு அனுப்ப தன்னால் முடியும் என இலங்கை காட்டினால், அதே இலங்கைக்கு தன் உளவு விமானத்தை அனுப்பமுடியும் என இந்தியாவும் காட்டுகின்றது
இந்த டேர்னியர் இந்திய தயாரிப்பு என்றாலும் பலமானது, நவீன கருவிகளை கொண்டது
இதுபோக அமெரிக்க இஸ்ரேல் நுட்பத்துடன் உருவான உளவு விமானங்கள் இந்தியாவிடம் உண்டு அவையும் செய்யவேண்டியதை செய்யும்
எப்படியோ சீன கப்பல் இந்தியாவினை உளவுபார்க்க வந்தால் சீன கப்பலையே உளவுபார்க்க தன் விமானத்தை அனுப்பி திருப்பி அடிக்கின்றது இந்தியா
அதே நேரம் இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் விமானங்களும் நீர்மூழ்கிகளும் உளவு விமானங்களும் சீன கப்பலை அணு அணுவாக ஆராயும் என்பதில் சந்தேகமில்லை
எதையோ செய்யபோய் வசமாக மாட்டி நிற்கின்றது சீன கப்பல் அநேகமாக இரு நாட்களுக்குள்ளே தலை தெரிக்க ஒடினாலும் ஓடலாம்


இது போல் ஆராய்ச்சி செய்து பதிவிடுவது மிக வியப்பளிப்பதாகவும் அதே சமயம் பாராட்டுக்கள் அளிக்கத் தக்கவையாக உள்ளது. அது Stanley Rajan தனி முத்திரை’!
எப்பொருள் யார்வாய் மொழிக் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் அறியும் அறிவுத் தேடல் இது! சாமான்யன் இவ்வாறு சிந்திக்க மாட்டான்! பல வகை நூல், சாதனங்கள், உலக நடப்பு இவற்றை ஊன்றிக் கவனித்து மனதில் வாங்கிப் பதிவிடும் பாங்கு இது! Appreciable & applaudable !
Really feeling very proud of you my son !!